Show all

ஒட்டுமொத்த இந்திய ஒன்றியம்! ஸ்டாலினை சமூகநீதி மீட்ட தலைவராக கொண்டாடுகிறது வரலாற்றுப் பார்வையில்

ஒன்றிய அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்திய ஒன்றிய அளவில் 27விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவிட்டாலும், அதன் பின்னணியில் திமுகவின் சட்டப் போராட்டம் மற்றும் நாடாளுமன்றத்துக்குள் குரல் எழுப்பியது உள்ளிட்ட பல்வேறு பாடுகள் அடங்கியுள்ளன என்ற செய்திகள் கீச்சுவில் தலைப்பாக்கப்பட்டு வருகின்றன.

14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்திய ஒன்றிய அளவில் 27விழுக்காடு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதல் செயல்படுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஒன்றிய அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்திய ஒன்றிய அளவில் 27விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவிட்டாலும், அதன் பின்னணியில் திமுகவின் சட்டப் போராட்டம் மற்றும் நாடாளுமன்றத்துக்குள் குரல் எழுப்பியது உள்ளிட்ட பல்வேறு பாடுகள் அடங்கியுள்ளன

இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு நீண்டகாலமாக இழுத்தடிப்பு செய்து வந்த நிலையில் அறங்கூற்றுமன்றத்தில் முதல்முறையாக பொதுநல வழக்கு தொடர்ந்தது திமுக. 

தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நேற்று தனது கீச்சுப் பக்கத்தில் 27விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டது, நாடு முழுக்க தலைப்பு விடையமாக மாறிவிட்டது. இன்று பெரும்பாலான முன்னணி ஆங்கில நாளிதழ்களில் 27விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது தான் தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. 

ஒன்றிய பாஜக அரசு பணிந்திருக்கும், இந்த இடஒதுக்கீடு பின்னணியில் என்ன நடந்தது என்பதை இந்தியா முழுவதுமே அலசத் தொடங்கியுள்ளனர். பழைய நிகழ்வுகளைப் புரட்டிப் பார்க்கின்றனர். அப்போது சிறப்பாக தமிழ்நாடு, அதில் முன்னணியில் திமுக எடுத்த முன்னெடுப்புகள் விவரமாக அவர்கள் கைகளுக்கு கிடைத்தது. 

பொதுவாக திராவிட கட்சிகள், கல்வி, மருத்துவம், சமூக நீதி ஆகிய கொள்கைகளில் மிகவும் தீவிரம் காட்டக் கூடியவை என்பது வட இந்தியாவைச் சேர்ந்த பலரும் அறிந்த தகவலாகத்தான் இருந்தது. இந்த முறை அவர்கள் இதை கண்கூடாக கண்டுவிட்ட மகிழ்ச்சியில், ‘ஸ்டாலின் தான் எங்கள் தலைவர்’ என்ற முழக்கத்தைக் கீச்சுவில் தலைப்பாக்கத் தொடங்கி விட்டனர். காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகள் இந்த விடையத்தில் பெரிய முன்னெடுப்பை எடுக்காத நிலையில், திராவிடக் கட்சி அதுவும் குறிப்பாக திமுக மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளான, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்றவை ஓரணியில் நின்று இந்த இட ஒதுக்கீட்டுக்காக போராடியதை வட இந்தியர்கள் தற்போது தான் படித்து பார்த்து தெரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். 

தங்களது கீச்சுப் பதிவுகளில் இந்தத் தகவல்களை அவர்கள் தெரிவிப்பதைப் பார்க்க முடிகிறது. வட மாநிலத்தைச் சேர்ந்த திலிப் மண்டல் என்ற இதழியலாளர் இந்தியாவே, ஸ்டாலினுக்கு நன்றி சொல்கிறது என்று கீச்சு பதிவிட்டுள்ள நிலையில், வட இந்தியர்களும் ஸ்டாலினை பாராட்டுகிறார்கள். 

தமிழகத்திற்கு பெருமையான தருணம் என்று அதை மறுகீச்சு செய்துள்ளார் இன்னொரு வடஇந்திய பெண் பேரறிமுகம். திலிப் மண்டல் கீச்சு ஆயிரக்கணக்கான விருப்பங்களை அள்ளியிருக்கின்றது. இது தவிர தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து ‘நன்றி ஸ்டாலின்’ என்ற முழுக்கத்தை கீச்சுவில் தலைப்பாக்கி வருகின்றனர். 

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய பேராண்மை கிடைக்க வேண்டும் என்பது திராவிட கட்சிகளில் விடாப்பிடி கொள்கையாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பிற மாநிலங்களை ஒப்பிட்டால் அனைத்து சாதி பிரிவினரும் சரிசமமாக தமிழ்நாட்டில் மட்டுமே வளர்ச்சி அடைந்து மேலே வர முடிகிறது. 

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி , சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் போன்றவை வடமாநிலங்களில் சமூக நீதி மீது சற்று அக்கறை காட்டக்கூடிய கட்சிகளாக உள்ளன. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால், மற்ற பெரிய கட்சிகள் அந்தந்த நேரத்து சிக்கல்களை மட்டும் வைத்து அரசியல் செய்யக் கூடியவையாக இருக்கின்றனவே தவிர நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் சமூக நீதி என்ற கொள்கையில் பெரிய பிடிமானம் இல்லாமல் இருக்கின்றன. 

எனவேதான், அகில இந்திய ஒதுக்கீடு என்று சொல்லப்படக்கூடிய விடையத்தில்கூட தமிழகத்தைச் சேர்ந்த திமுக போன்ற கட்சிகள் தான் முன்னெடுப்பு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. என்னதான் எதிரும் புதிருமாக இருந்தாலும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே தங்களது ஆட்சி காலத்தில் இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதி கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டதே கிடையாது. கருணாநிதி கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களை ஜெயலலிதா கிடப்பில் போட்டது வரலாறு. 

ஆனால் சமூக நீதி என்று வந்துவிட்டால் ஜெயலலிதாவும், அண்ணா மற்றும் கருணாநிதி கொள்கைகளைப் பின்பற்றினார், அந்த திட்டங்களை மேலும் மெருகூட்டினாரே தவிர கிடப்பில் போடவில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. நீட் தேர்வு இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் எடப்பாடி பழனிசாமி அரசு, ஒன்றிய பாஜக அரசுக்கு அனுசரணையாக நடந்து கொள்கிறது என்பது திமுகவின் தொடர் குற்றச்சாட்டாக இருந்த போதிலும் நீட் தேர்வை களைய முடியவில்லை என்று தெரிந்ததும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. 

தமிழ்நாட்டின் முதன்மையான இடத்தில் இரு திராவிடக் கட்சிகலும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் என்பதை, அரசியல் திறனாய்வாளர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். 

இப்போது 27விழுக்காடு இட ஒதுக்கீடு பாடுகள் பொருத்த அளவில் திமுக தனது சமூகநீதி பயணத்தில் மற்றொரு மைல்கல்லைத் தொட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்த விவரங்கள் பெரிதாக தெரிந்திராத வட இந்தியாவை சேர்ந்த மக்களும் இப்போது பாராட்டத் தொடங்கியுள்ளனர். 

ஒருபக்கம், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒன்றிய அரசு பணிகளில் ஒதுக்க வேண்டிய பணியிடங்களில் பாதி மட்டும்தான் நிரப்பப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக ஒன்றிய அரசு பணியில் சேர முடியாமல் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீட்டில் சமூக நீதி காப்பாற்றப்பட்டது போல, ஒன்றிய அரசு பணியிடங்களில் நிரப்பப்படாமல் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டால் ஒட்டு மொத்த இந்தியாவில் சமூக நீதி தூக்கிப்பிடிக்கப்ட்டாதாக அமையும் என்று, அதற்கான விதைபோட்ட திமுகவை அறிவார்ந்த வட இந்திய மக்கள்  பாராட்டி மகிழ்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.