Show all

வெறிகொண்டலையும் ஹிந்துத்துவா அமைப்புகள்! கோவிலுக்குள் பெண்களுக்கான அனுமதியை எதிர்த்து

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று மலையாள நடிகர், கொல்லம் துளசி, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் இரண்டு துண்டாக வெட்டப்படுவர். வெட்டப்பட்ட உடலின் ஒரு பாதி, திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டு, டில்லிக்கும் அனுப்பி வைக்கப்படும். என்று பேசியிருந்த நிலையில், 

இன்று கேரள மாநில சிவசேனா தொண்டர் பெரிங்அம்மாலா அஜி மூலமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைந்தால், கூட்டாக தற்கொலை செய்துகொள்வோம் என்று கேரள மாநில சிவசேனா கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பல்வேறு பொதுநல, மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொடுத்த வழக்கின் அடிப்படையில், சபரிமலை கோயிலுக்கு அனைத்து அகவைப் பெண்களும் செல்ல அனுமதிக்க உத்தரவிட்டு உச்சஅறங்கூற்றுமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. 

இதற்கு ஹந்துத்துவா ஆதிக்க சக்திகள் சார்ந்த தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஹந்துத்துவா ஆதிக்க சக்தி நபர்கள், பாரதிய ஜனதா, காங்கிரஸ், மற்றும் பல்வேறு ஹிந்துத்துவா உதிரி கட்சிகளிலும், அங்கம் வகிக்கின்றனர்.

தமிழகத்தில், திமுக, பொதுவுடைமைக் கட்சிகள், அதிமுக, அமமுக, நாம்தமிழர், மதிமுக, என்று அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்ப்பை பாராட்டி வரவேற்கின்றன.
தமிழகத்தை பொறுத்த வரை, நோட்டாவின் எதிரிக்கட்சியின் சில தலைகள் மட்டும் தீர்ப்புக்கு  எதிராக மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன. 

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,940.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.