Show all

உச்ச நீதி மன்றத்தில் ஆஜராகாமல் இழுத்தடிப்பதாக உயர்நீதிமன்ற நீதியரசருக்கு பிடியாணை

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதியரசர் கர்ணன், 7 பேர் கொண்ட உச்ச நீதி மன்ற அமர்வு முன்பு ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்ததாக இன்று அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிஅரசராக இருந்தவர் சி.எஸ்.கர்ணன்.

     இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்;கு மாற்றப்பட்டார். தலைமை நீதிஅரசர் பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் என்று சொல்லப் படுகிறது.

     இப்பிரச்சினை உச்ச நீதி மன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதும், கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

     புகாரின் இந்நிலையில், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதி மன்ற தலைமை நீதிஅரசர் உள்ளிட்டோருக்கு நீதிஅரசர் கர்ணன் புகார் கடிதங்களை அனுப்பினார். அதில்,

சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசர்கள் மீது புகார்களைத் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

     7 நீதிஅரசர்கள் அமர்வு இப்பிரச்சினையைத் தாமாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்காக, உச்ச நீதி மன்ற விசாரணைக்கு எடுத்தது.

     இவ்வழக்கை தலைமை நீதிஅரசர் ஜே.எஸ்.கேஹர், நீதிஅரசர்கள் தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோக்கூர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய 7 நீதிஅரசர்கள் அமர்வு விசாரிக்கிறது. நீதிஅரசர் கர்ணன் இந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டும் என்று நீதிஅரசர்  கர்ணனுக்கு உச்ச நீதி மன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது.

     ஆனால் நீதிஅரசர் கர்ணன் வரவில்லை. நீதிஅரசர்  கர்ணன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

    நீதிஅரசர் கர்ணன் உச்ச நீதி மன்றத்தில் ஆஜராகும்படி உச்ச நீதி மன்ற அமர்வு உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிஅரசர் கர்ணனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

     நமது இந்திய நாட்டு சட்ட நிருவாகம் பிரிட்டீஸ் ஏகாதிபத்திய அரசால் தங்களுக்கு அடிமைப் பட்டிருந்த நாடுகளின் மக்களை நிருவாகப்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்ட சட்ட நிருவாகம்.

     அவர்களிடம் இருந்து விடுதலை பெற்ற நாம்-

தமது மக்களுக்காக தமது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட சட்ட, பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் புதியதாக சட்ட நிருவாகத்தை முழுமையாக வடிவமைத்துக் கொள்ளாமல், சிலபல மாற்றங்களோடு-

பிரிட்டீஸ் ஏகாதிபத்திய அரசால் தங்களுக்கு அடிமைப் பட்டிருந்த நாடுகளின் மக்களை நிருவாகப்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்ட சட்ட நிருவாகங்களையே பயன் படுத்தி வருகிறோம்;.

எனவே, குற்றவாளி என்று ஒருவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விட்டால், அவர் காலணி நாட்டு அடிமை.

குற்றம் சாட்டியவர், அதே காலணி நாட்டு அடிமையாக இருந்த போதும், அவர் பிரிட்டீஸ் அரசு சட்ட நிருவாகத்திடம் வழக்கை கொண்டு போனதாலேயே அவர் பிரிட்டீஸ் அரச சட்ட நிருவாகத்தை அங்கிகரிக்கிறவர் என்ற நிலையில், பிரிட்டீஸ் குடிமகனுக்கு இணையான அதிகாரம் பெற்றவராகிறார்.

     நீதிமன்ற சட்ட நிருவாகத்தின் அடிப்படையில் அவர் குற்றமற்றவராக நிருபிக்கப் பட்டாலன்றி அவருக்கு விடுதலையில்லை.

     குற்றம் சாட்டியவர் விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று  விடுவிக்கலாம்.

     மற்றபடிக்கு எந்த இந்திய தர்ம நியாயங்களும் எடுபடாது.

அந்த வகையாகவே கர்ணன் தரப்பு நியாயங்களைக் கூறி அவர் நீதி அரசர் என்ற போதும் கூட சமாளிக்க இயலாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.