Show all

சர்ச்சைக்குரிய ஈசா யோகா மையத்தின் குளத்தில் மூழ்கி மாணவர் பலி

சர்ச்சைக்குரிய ஈஷா யோகா மையத்தின் தீர்த்த குளத்தில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     கோவை வௌ;ளியங்கிரி மலையடிவார வனப்பகுதியில் பலநூறு ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக வளைத்து கடிட்டங்களை கட்டியுள்ளது ஈசா யோகா மையம். இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு இத்தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

     ஈசா யோகா மையத்தின் பெரும்பாலான கட்டிடங்கள் யானைவழித்தடங்களே என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த ஈசா யோகா மையத்தின் நிகழ்ச்சியில் அண்மையில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டதற்கும் கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

     இந்த நிலையில் ஈசாவின் பெரிய குண்டம் எனப்படும் ஆண்கள் தீர்த்த குளத்தில் குளித்த வேலூர் கல்லூரி மாணவர் ரமேஷ் நீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.