Show all

தேசம் உதவியற்ற நிலையில் இருப்பதைப் போல உணர்கிறாரம் ப.சிதம்பரம்! கீச்சில் பதிவு

இரண்டு கேள்விகளை எழுப்பி, நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் இருவரும் இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதிலிருந்து தோல்வி அடைந்துவிட்டார்கள், என்று தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் எண்பது விழுக்காட்டு மக்கள் ஒன்னரை மாத சம்பளமோ, வருமானமோ இல்லாமல் கடன் கொடுக்க ஆளும் இல்லாமல், கந்து வட்டிக்கு வாங்கிய கடன் தவணை செலுத்த வழியில்லாமல், வீட்டிற்கு வாடகை செலுத்த வழியில்லாமல், உண்ண உணவில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையை “தேசம் உதவியற்ற நிலையில் இருப்பதைப் போல” உணர்வதாக கீச்சுவில் ப.சிதம்பரம் இன்று பதிவிட்ட கருத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஏழை மக்கள் கைகளில் பணம் இல்லாமல், உணவுக்கு வழியில்லாமல் இலவசமாகக் கிடைக்கும் சமைக்கப்பட்ட உணவுகளை வாங்குவதற்காக நாள்தோறும் வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது. இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகளைப் பார்க்க முடிகின்றது 

ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் பணத்தைப் பரிமாற்றம் செய்து அவர்களின் மதிப்பைப் பாதுகாத்து அவர்களைப் பட்டினியிலிருந்து அரசால் பாதுகாக்க முடியாதா? 

இந்திய உணவுக் கழகத்தில் 7.7 கோடி டன் உணவு தானியங்கள் இருப்பு இருக்கிறதே? அதில் சிறிது அளவு எடுத்து தேவைப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக அரசாங்கத்தால் ஏன் வழங்க முடியாதா? 

நான் எழுப்பிய இந்த இரு கேள்விகளும் பொருளாதாரம், மற்றும் தார்மீக கேள்விகள். நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் இருவரும் இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதிலிருந்து தோல்வி அடைந்துவிட்டார்கள், என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.