Show all

இந்த பைக் உங்களுக்குப் பிடிச்சிருக்கா! வாங்குங்கள்; மாட்டிக்கொண்டு பெற்றோரை அலைகழிக்க, கிழக்கு கடற்கரைச் சாலையில் பந்தயம் வைக்காதீர்கள்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டிவிஎஸ், தனது எதிர்கால வணிக விரிவாக்கத்திற்கு பிரிட்டன் பைக் நிறுவனத்தை வாங்கி அசத்துகிறது.

06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டிவிஎஸ், தனது எதிர்கால வணிக விரிவாக்கத்திற்கு ஒரு முன்னெடுப்பில் அசத்தியுள்ளது. 

பிரிட்டன் நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் நோர்டான் நிறுவனத்தை முழுமையாக வாங்கியுள்ளதுதான் அந்த அசத்தல் முன்னெடுப்பு. நார்டன் விளையாட்டு மற்றும் ஆடம்பர இருசக்கர வாகன பிரிவில் மிகவும் பிரபலமான பிரிட்டன் நிறுவனம் தான் இந்த நார்டன் மோட்டர்சைக்கிள்ஸ். 

இந்நிறுவனம் 1898ஆம் ஆண்டு ஜேம்ஸ் லேன்ஸக்டவுன் நார்டன் என்பவரால் உருவாக்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் தனது பழைய மாதிரி பைக்குகளை மறுவடிவமைப்புச் செய்து சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது மக்கள் நடுவிலும் அதிகளவிலான வரவேற்பை பெற்றுள்ள நிலையின் டிவிஎஸ் இந்நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. 

பிரிட்டன் நாட்டின் நார்டன் மோட்டர்சைக்கிள்ஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சுமார் 16 மில்லியன் பிரிட்டன் பவுண்டு கொடுத்து முழுமையாக வாங்கியுள்ளது. இந்தத் தொகையை மொத்தமாகப் பங்குகளாகக் கொடுக்காமல் பணமாகக் கொடுத்து வாங்கியுள்ளது டிவிஎஸ்.  

தற்போது நார்டன் மோட்டர்சைக்கிள்ஸ் லிமிடெட் நிறுவனம் எலக்ட்ரிக் பைக்குகளையும் தயாரித்து அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. நார்டன் மோட்டர்சைக்கிள்ஸ் பிரிட்டன் நாட்டு நிறுவனமாக இருந்தாலும் இந்நிறுவனம் உலகளவில் மிகவும் பேரறிமுகமே. 

டிவிஎஸ் மோட்டார்ஸ் இந்தியாவில் அடுத்தச் சில மாதத்தில் நார்டன் நிறுவனத்தின் கம்மாண்டோ, டோமினேட்டர், வி4ஆர்ஆர் என அடுத்தடுத்து பைக்குகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. 

ஆடம்பரத்திற்காக இந்த பைக்குகளை இளைஞர்கள் வாங்கி அசத்தும் அதே நேரத்தில், விளையாட்டு நோக்கத்திலும் அதிக பைக்குகள் விற்பனையாகும் என்று கருதுகிறது டிவிஎஸ். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.