Show all

பெண் காலடியில் கதறும் ஆண், காணொளி! இன்டிகோ விமான நிறுவனத்திற்குத் தொடரும் தலைவலிகள்

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்டிகோ விமான நிறுவன பெண் ஊழியர் காலில் ஆண் ஒருவரை விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்டிகோ விமான நிறுவனம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சமீபத்தில் பயணி ஒருவரை அடித்து இழுத்துச் சென்றதாக வெளியான காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இன்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டது, மேலும், அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தது.

ஆனால் இன்டிகோ தொடர்பான சர்ச்சைகள் முடிவில்லாமல் போய்க்கொண்டுள்ளளது. குவகாத்தியில் பெண் பயணியின் செல்பேசியை இன்டிகோ ஊழியர் பறித்துவிட்டதாக ஒரு சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. புகாரையடுத்து அந்த ஊழியர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இப்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறி ஒரு காணொளி தீயாய் பரவிவருகிறது. அதில் இன்டிகோ விமான நிறுவன பெண் ஊழியர் தனது காலில் ஒரு ஆணை விழுந்து மன்னிப்பு கேட்க கட்டளையிடும் காட்சி உள்ளது.

தெலுங்கில் அந்த பெண் பேசுகிறார். ‘என்னு காலை தொடரு. குனி, குனி, குனி என்று அந்த பெண் சத்தமாக கூறும் காட்சி அதில் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அந்த பெண் மீது தவறு இல்லையாம். காலில் விழுந்த நபரும் அவரது நண்பரும், பணிக்கு வந்தபோது அந்த பெண்ணை தொடர்ந்து வந்துள்ளனர். விமான நிலையம் வந்ததும் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவர்களைப் பிடித்தனர். இதையடுத்து அந்த நபர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து இன்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்டிகோ பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற நபர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,613

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.