Show all

டிரா ஆனது இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்

இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் பந்து வீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக முதல் இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தமாக 32.5 வர்கள் மட்டுமே வீசப்பட்டது. 3-வது நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 

பின்னர் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி தலா 3 விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது இந்திய அணி. லோகேஷ் ராகுல் 79 ரன்கள், தவான் 94 ரன்கள், விராட் கோலி 104 ரன்கள்  என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியாக இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினால் வெற்றி என்ற நோக்குடன் இந்தியாவும் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி நோக்குடன் இலங்கையும் ஆடியது. ஆனால் இலங்கை அணியினர் தொடர்ந்து ஆட்டமிழந்ததால் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. இந்தியா எப்படியும் வெற்றி பெற்று விடும் என்று எண்ணிய நேரத்தில் வெளிச்சமின்மை காரணமாக 26.3 ஓவருடன் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். 

இரண்டு இன்னிங்சிலும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 24 ஆம் தேதி நாக்பூரில் நடக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.