Show all

மகாராஷ்டிரத்தில் அரசியல் விளையாட்டுப் போட்டிகள் முடிந்தன! ஊக்கமருந்து (அஜித்பவார்) பயன்படுத்திய பாஜக வெளியேற்றம்

மகாராஷ்டிரத்தின் 18வது முதல்வராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று வியாழக்கிழமை பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரி அவர்கள்  பதவியேற்பில் முன்னிலை வகித்தார்.

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிரத்தில் அரசியல் விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன! ஊக்கமருந்து (அஜித்பவார்) பயன்படுத்திய பாஜக வெளியேற்றப்பட்ட நிலையில் வாகையராக சிவசேனை தலைவர் 59 அகவை உத்தவ் தாக்கரே தேர்வானார். இரண்டாம் மூன்றாம் இடங்களை தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் கைப்பற்றின.

ஆம்! மகாராஷ்டிரத்தின் 18வது முதல்வராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று வியாழக்கிழமை பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரி அவர்கள்  பதவியேற்பில் முன்னிலை வகித்தார். மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

உத்தவ் தாக்கரேவுடன் சிவசேனையைச் சேர்ந்த ஏக்நாத் சிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலாசாகேப் தோராட், நிதின் ரௌத் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கான துறைகள் பின்னர் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு மும்பை நகரிலும், நிகழ்ச்சி நடைபெற்ற சிவாஜி பூங்கா பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. உத்தவ் தாக்கரே முதல்வரானதை மாநிலம் முழுவதும் உள்ள சிவசேனை தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். மகாராஷ்டிர அரசியலில் பால் தாக்கரே குடும்பத்தினர் பல ஆண்டுகளாக செல்வாக்குடன் இருந்து வந்தபோதிலும், அக்குடும்பத்தில் இருந்து இப்போதுதான் ஒருவர் முதல்வராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வராகியுள்ளதை அடுத்து சிவசேனை கட்சியின் இதழான ‘சாம்னா’வின் நிர்வாக ஆசிரியர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகிவிட்டார்.

கடந்த 5 ஆண்டுகளாக பாஜக-சிவசேனை கூட்டணி மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் இருந்தது. இப்போது சிவசேனை- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் இணைந்து உருவாக்கிய மகாராஷ்டிர விகாஸ் முன்னணியின் ஆட்சி அமைந்துள்ளது. 
கோட்டையை பாதுகாக்க ரூ.20 கோடி ஒதுக்கவும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,351.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.