Show all

டேனிய மொழி! உலக மொழிகள் வரிசையில்.

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: டேனிய மொழி சுமார் ஒரு கோடிக்கு குறைவான மக்களால் பேசப்படுகின்றது. டேனிய மொழி தேசிய மொழியாக உள்ள நாடு டென்மார்க். டென்மார்க் இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. டென்மார்க்கின் பரப்பளவு 43,094 சதுர கிலோமீட்டர்கள். டென்மார்க் நாடானது தீபகற்பம், ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்படுகின்றது. ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர்.

டென்மார்க் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.

வருவாய் ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடு என்று உலகளவில் பாராட்டப்படும் நாடு டென்மார்க் ஆகும். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும் என்று அறியப்படுகிறது. இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கைத்தரம், நலங்குத்துறை, மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டென்மார்க்கின் தேசிய மொழியான டோனிய மொழி, பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. 90விழுக்காடு டென்மார்க் மக்கள் டோனியர்களாவர். டென்மார்க் முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் நடுநிலை வகித்தது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,350.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.