Show all

கோவாவில் பாரிக்கர் முதல்வராக எம்.ஜி.பி. ஆதரவு

கோவாவில் நடுவண் அமைச்சராக இருக்கும் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைய, அம்மாநிலத்தின் எம்.ஜி.பி. கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

     கோவா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளையும் பாஜக 13 தொகுதிகளையும் பிற கட்சிகள் 10 தொகுதிகளையும் வென்றுள்ளன. ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்க 21 தொகுதிகள் தேவையான நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் மாநிலக்கட்சிகளின் ஆதரவைப் பெற முனைந்து வருகின்றன.

     காங்கிரஸ் ஆட்சி அமைக்க 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது. பாஜகவுக்கு 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இரு கட்சிகளும் புதிய கூட்டணிக்காக திட்டமிட்டுக் கொண்டிக்கின்றன.

     இந்நிலையில், மூன்று சட்டமன்றஉறுப்பினர்களைக் கொண்ட மாநிலக்கட்சியான எம்.ஜி.பி. நடுவண் அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் ஆட்சி பாஜக அமைக்க முன்வந்தால், தங்களது ஆதரவை அளிப்பதாக கூறி பாஜகவின் குதிரைப் பேரத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

     கோவா முன்னணி மூன்று தொகுதிகளையும், சுயேட்சைகள் மூன்று தொகுதிகளையும் தேசியவாதக் காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ள நிலையில் அவைகள் பாஜகவின் குதிரைப் பேரத்திற்கு பணியுமானால் கோவாவில் பாரிக்கர் முதல்வராக பாஜகவின் ஆட்சி அமையும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.