Show all

அரசியல் குறித்த கமல்ஹாசனின் அச்சம் கலந்த பதிவு

அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்று கூறிய கமல்ஹாசன், நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

     தன்னால் வெறும் கலைஞனாக மட்டுமே இருக்க முடியாது என்று கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

     மேலும் சமீபத்திய அரசியல் நிலைமை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

     திராவிட இயக்கங்கள் அழிந்து வருவதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியது அவரது கருத்து என்று தெரிவித்தார்.

     செயலலிதா ஆன்மா சசிகலாவை மன்னிக்காது; அதற்காக தான் மற்ற இருவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

     முதல்தகுதி எளிமையான தலைவர்கள் தேவைப்படுவதாகக் கூறிய அவர், அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் தனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார்.

     ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலைபேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.

     சட்டங்கள் மாறவேண்டும் காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும் என்று கூறிய கமல், மக்களின் தேவைகளுக்கிணங்க சட்டங்களும் மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.

     சாதியை எடுத்துவிடுவதுதான் எனது கொள்கை, சாதியே இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்றும் கமல் தெரிவித்தார். அரசியல் தலைவர்கள்; மக்களுக்காக பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களை இயற்ற வேண்டும்.    எனக்கு காந்தி, பெரியார் மாதிரியான தலைவர்கள் தான் உண்டு. ஏனென்றால் காந்தி, பெரியார் இருவரும் தேர்தல் அரசியலில் இல்லை என்று கூறினார்.

     அரசியல் மாறுபடும் கொள்கை நேரத்துக்கு நேரம் மாறுபடும். மக்களுக்கு தேவையான அரசியலே தேவை. அந்த அரசியல் காலத்துக்கு காலம் மாறுபடும்.

     காலத்தின் தேவையாக இருந்ததால் தான் திமுக அதிமுக இயக்கங்கள் உருவெடுத்தன என்றார். திமுக சாதாரணமாக தொடங்கி ஆட்சியமைக்கும் அளவிற்கு மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது என்றும் கமல் தெரிவித்தார்.

     தான் யாருக்கும் ஆதரவாகவும் குரல் கொடுக்கவில்லை என்றார். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்று கூறிய அவர், திரைத்துறையைப் பலரும் விமர்சனம் செய்வது போல தான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்வதாக கூறினார்.

     அதற்காக தன்னை அரசியலுக்கு வரச்சொல்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். திராவிட இயக்கங்கள் அழிந்து வருவதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியது அவருடைய கருத்து என்று தெரிவித்த கமல், திராவிட இயக்கங்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் கூறினார். திராவிட இயக்கங்கள் எந்த அடிப்படைக்காக தோற்றுவிக்கப்பட்டதோ அந்த அடிப்படைகளுக்;கு தொடர்ந்து நிற்;பேன் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.