Show all

ஜியோ நிறுவன மிடுக்கு பேசியின் விலை 0 தானாம்

ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி மிடுக்குபேசியை அறிமுகப்படுத்தப்போவதாகக் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகிவந்தன. இந்நிலையில், அந்நிறுவனத்தின் சார்பாக 4ஜி மிடுக்குபேசி; இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

     ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி இந்த 4ஜி மிடுக்குபேசியை அறிமுகப்படுத்திப் பேசினர்.

இந்தியாவின் மிடுக்குபேசி

என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜியோபேசியில் 4ஜி தவிர, ஒலி ஆணை மூலம் அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி, ஆபத்துக்காலங்களில் அவசர உதவி குறுஞ்செய்தி, ஒலித்தேடல் மூலம் விருப்பமானவற்றை இணையத்தில் தேடும் வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இருக்கின்றன.

      ஜியோபேசி வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான வசதிகளையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த மிடுக்குபேசி வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள், மாதம் ரூ.153 செலுத்தினால் ‘ஜியோ தன் தனா தன்’ வாய்ப்பில் எல்லையில்லா அழைப்புகள், 4ஜி தரவையும்; பெற முடியும்.

     சந்தையில் 4ஜி மிடுக்குபேசியின்; குறைந்தபட்ச விலை ரூ.4,000 முதல் தொடங்குகிறது. ஆனால் ரூ.1,500 வைப்பு தொகையைச் செலுத்தி இந்த மிடுக்குபேசியை பெற்றுக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத்தொகையும்  வாடிக்கையாளர்களுக்கே திரும்பத்தரப்படுமாம்.

     எனவே இந்த மிடுக்குபேசியின்; விலை ரூ.0 தான் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். ஆகஸ்டு 24-அன்று முதல் ஜியோபேசிக்கான முன்பதிவு தொடங்குகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.