Show all

ஓவியா! ஓவியா! ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் நடவடிக்கைகள்தான் இப்போதைய சூடான தலைப்பு.  திரைப்படத்தில் நடித்தபோது இருந்த ரசிகர்களைவிட, இப்போது ரசிகர் பட்டாளம் அதிகரித்துவிட்டது என்கின்றனர் ஓவியா நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்.

ஓவியாவுக்கு தானும் ரசிகனாகிவிட்டதாக நெகிழ்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி-

‘எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பேன். ஓவியா நல்ல நடிகை. திறமையானவரும் கூட. அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ‘நீர் பறவை மற்றும்’ ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் கதாபாத்திரம் தேர்வுக்கு வந்திருந்தார். அப்போது ஓவியாவிடம் நான் பேசியிருக்கிறேன். ஓவியாவின் அம்மாவுக்கு புற்றுநோய் இருந்த நேரம் அது. அதை கூறும்போதுகூட இயல்பாக இருந்தார். ஏதோ பரிதாபத்துக்காக இவர் சொல்கிறார் என நினைத்து விசாரித்தேன். அப்போதுதான் தெரிந்தது, அவர் அம்மாவின் சிகிச்சைக்காகத்தான் படங்களில் விரும்பி ஒப்பந்தம் ஆகிறார் என்று. அதைக் கேட்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது. அப்போதே, எதிர்காலத்தில் ஓவியாவை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். சரியான பாத்திரம் அமையாததால், அவரை நடிக்க வைக்கும் முயற்சி தள்ளிக் கொண்டே போனது.

     பிக் பாஸ் வீட்டில் அவர் வெளியில் வந்தவுடன், என்னுடைய படங்களில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளேன். அவருக்கான கதை தயாராக இருக்கிறது. ஒரு பெண் இத்தனை தடைகளைத் தாண்டி, மன வருத்தத்தை மனதில் வைத்துக்கொண்டு வெளியே சிரிப்பது மிகவும் கடினமான விசயம். நிறைய கலைநிகழ்ச்சிகளில் ஓவியா நடனம் ஆடுவார். அப்போதும் அவர் சிரித்துக்கொண்டுதான் ஆடுவார். ஒரு கொடிய நோய்க்குத் தனது தாயை பறிக்கொடுத்துவிட்டு, இன்னும் தனது வாழ்க்கையிலும் பெரிதாக வாழ்மானம்; அமையாமல்;, கலைத்துறையில் புகழ்பெற வேண்டும் என நினைக்கும் ஓவியாவின் போராட்டக் குணம் எனக்குப் பிடித்திருக்கிறது. இந்தச் சின்ன அகவை பெண்ணுக்குள் இருக்கும் மனத்துணிவு எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஒரு படைப்பாளிக்கு பாரதியும் ஷெல்லியும் ரவீந்திரநாத் தாகூரும்தான் உத்வேகமாக அமைய வேண்டும் என்ற தேவையேதும் இல்லை. ஒரு சமகால பெண்ணும் உத்வேகமாக அமையலாம்.

     எனக்கு ஓவியாதான் உத்வேகமாக தெரிகிறார். அவர் மீது  ஒருவிதமான கரிசனமும் அன்பும் ஏற்படுகிறது. எனவேதான், அவரைப் பாராட்டி கீச்;சில் பதிவு செய்தேன் என்றார் நெகிழ்ச்சியுடன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.