Show all

சரக்கு-சேவை வரி போதுமானது! மோடி அரசு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மலேசியா போல தோல்வியைத் தழுவ

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 மலேசியாவின் புதிய தலைமை அமைச்சர் மகாதிர் முகமது தேர்தலில் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சரக்கு-சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி-ஐ சுழியம் விழுக்காடு ஆக்குவதாக அறிவித்தார். 

சரக்கு-சேவை வரிக்குப் பதிலாக மலேசியாவில் விரைவில்; பழைய முறை அமலுக்கு வர உள்ளது. 

சரக்கு-சேவை வரிஅமல் படுத்தியது முன்னால் முதல்வரான நஜிப் ரசாக்கால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கான ஒரு தலையாய காரணம் ஆகும். அண்மையில் முதல்வராகப் பொறுப்பேற்ற மகாதிர் முகமது தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது போன்று சரக்கு-சேவை வரியை நீக்கியுள்ளார். இந்தியாவிலும் தொழில் வணிகம் பாதிக்கப் பட்டு, வணிகர்கள் தொழில் நிறுவனர்கள் பலர் சரக்கு-சேவை வரி அமலுக்கு வந்த பிறகு நடுவண் அரசு மீது மிகவும் கோபமாக உள்ளனர். 

மலேசியாவில் சரக்கு-சேவை வரி அமலுக்கு வந்த நிறகு எண்ணெய் விலை சரிவு மற்றும் பண மதிப்புச் சரிவு போன்றவை அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இத்தனைக்கும் மலேசியாவில் ஒரே வரி விகிதம் என 6 விழுக்காடு என சரக்கு-சேவை வரி உள்ளது. ஆனால் இந்தியாவில் 4 வரி விகிதங்கள், அதாவது அதிகம் நுகரப்படும் பொருட்களுக்கு 5விழுக்காடு பின்னர் 12விழுக்காடு 18விழுக்காடு மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 28 விழுக்காடு என்பது சரக்கு-சேவை வரியாக வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் மோடி அரசு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி இழப்பதற்கு சரக்கு-சேவை வரி ஒன்றே போதும். வடமாநிலங்களில் அந்த பாதிப்பை மதவாத அழிப்பான் கொண்டு அழித்து வருகிறார்கள். தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் அது சாத்தியப் படாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,793. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.