Show all

மாநிலங்களவை இனி இந்தியாவைக் காப்பாற்றும்!

தற்போது மாநிலங்களவையில் மட்டும் கூட்டாட்சி நடப்பதற்கான வாய்ப்பை, பீகாரின், மீண்டும்புதிய முதல்வர் நிதிஷ்குமார் கொண்டு வந்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் வெளியேறியதால் பாஜக இனி- மதவாத, ஆதிக்கவாத, கார்ப்பரேட் நலனுக்கான, தான்தோன்றித் தனமான சட்டமுன்வரைவுகளை எளிதாக சட்டமாக்க முடியாத நல்லதொரு நிலை இந்தியாவிற்கு கனிந்துள்ளது. 

26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியா விடுதலை பெற்ற கடந்த எழுபத்தி நான்கு ஆண்டுகளில், முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முந்நூற்று நாற்பத்து மூன்று நாட்கள் நடைபெற்ற, தலைமைஅமைச்சர் விபிசிங் ஆட்சி மட்டுமே உண்மையான கூட்டாட்சி ஆகும்.

தற்போது மாநிலங்களவையில் மட்டும் கூட்டாட்சி நடப்பதற்கான வாய்ப்;பை, பீகாரின் மீண்டும் புதிய முதல்வர் நிதிஷ்குமார் கொண்டு வந்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் வெளியேறியதால் பாஜக இனி- மதவாத, ஆதிக்கவாத, கார்ப்பரேட் நலனுக்கான, தான்தோன்றித் தனமான சட்டமுன்வரைவுகளை எளிதாக சட்டமாக்க முடியாத நல்லதொரு நிலை இந்தியாவிற்கு கனிந்துள்ளது. 

ஒன்றியத்தில் ஆளும் பாஜக தலைமையிலான ஒன்றிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு, மாநிலங்களவையில் பாஜக மட்டுமே கொண்டாடும் வகைக்கான சட்ட முன்வரைவுகளை நிறைவேற்ற தேவையான பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி இருப்பது பாஜகவுக்கு மேலும் பின்னடைவை உண்டாக்கியுள்ளது.

பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியில் இருந்தது. முந்தாநாள் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார்.

ஒன்றிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, ஐக்கிய ஐனதா தளம் திடீரென வெளியேறி இருப்பது, வரும் நாட்களில் ஒன்றிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், உடனடி தாக்கம் மாநிலங்களவையில் தான் இருக்கும் என தெரிகிறது. காரணம், அங்கு ஆளும் பாஜகவுக்கு, பெரும்பான்மை பலம் இல்லை.

கூட்டணிக் கட்சிகளை சேர்த்தாலும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது. இதனால் தோழமை கட்சிகளின் தயவில் தான் பாஜக அங்கு செயல்பட்டு வருகிறது. சட்ட முன்வரைவுகளை மக்களவையில் மிக எளிதாக நிறைவேற்ற முடியும் பாஜகவால், மாநிலங்களவையில் கணக்குப்போட்டு, பிற கட்சிகளிடம் பேசி வளைப்படுத்திய பிறகே நிறைவேற்ற முடிகிறது. மாநிலங்களவையின் தற்போதைய பலம் 237 இடங்கள். ஜம்மு காஷ்மீருக்கான 4 இடங்கள், திரிபுராவுக்கான 1, நியமன இடங்களுக்கான 3 என, மொத்தம் 8 இடங்கள் காலியாக உள்ளன.

மாநிலங்களவையில் சட்டமுன்வரைவுகளைச் சிக்கலின்றி நிறைவேற்ற, 119 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அது இல்லை என்பதால், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆகிய இரண்டு கட்சிகளின் தலா 9 உறுப்பினர்கள் அதிமுகவின் 4 உறுப்பினர்களின் ஆதரவை வைத்து தான், பாஜக மாநிலங்களவையில் சட்டமுன்வரைவுகளை நிறைவேற்றி வருகிறது. 

கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சுயேச்சை மற்றும் 5 நியமன பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்தாலும், மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 114 ஆகத்தான் உள்ளது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியிலிருந்து விலகி உள்ளது. அக்கட்சிக்கு மாநிலங்களவையில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளனர். இவர்களில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கும் அடக்கம்.

இப்போது, ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியுள்ள நிலையில், மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 109 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மை பலத்திற்கு, 10 பாராளுமன்ற உறுப்பினர்கள், குறைவாக உள்ளனர். மஹாராஷ்டிராவில் சிவசேனா உடைந்ததிலும் பலன் இல்லை. காரணம், சிவசேனாவின் மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினர்கள், மூவருமே, உத்தவ் தாக்கரே அணியில் உள்ளனர். இந்த சூழலில், பாஜக சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.

குளிர்கால கூட்டத்தொடருக்கு முன், அது மீதமிருக்கும் மூன்று நியமன பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும். விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள திரிபுராவில் வெற்றி உறுதியானால் பாஜகவுக்கு அங்கிருந்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்கும். ஆக, வௌ;வேறு வழிகளில் முயற்சி செய்தாலும், மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் அடுத்த ஓராண்டுக்கு 113 ஆக மட்டுமே இருக்கப் போகிறது. 

இது தான் பாஜகவுக்கு பின்னடைவாகவும் இந்தியாவில் மாநிலங்களவையில் மட்டும் கூட்டாட்சி இயலை நிறுவ முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, மாநிலங்களவையில் சட்டமுன்வரைவுகள் நிறைவேற்றத்திற்கு, அதிமுக ஒய்.எஸ்.ஆர்.காங்., பிஜு ஜனதா தளம் என, தோழமைக் கட்சிகளை அதிகம் சார்ந்திருக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,337.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.