Show all

கரும்புள்ளி! சேனை வீரர் இழப்பில் துக்கம் கொண்டாடப்பட்ட கருப்பு நிகழ்வில்

சேனை வீரர் லட்சுமணனின் உடலுக்கு இரங்கல் செலுத்தி விட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசியதான அடாவடி அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியது.

29,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: புதன்கிழமை அதிகாலை, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பலியான மதுரையைச் சேர்ந்த சேனை வீரர் லட்சுமணனின் உடல் நேற்று மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

விமான நிலையத்தில் அரசு சார்பில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், அதிகாரிகள், உள்ளிட்டோர் இரங்கல் கடைபிடித்தனர்.

பின்னர் அவருடைய உடல் சொந்த ஊர் புதுப்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பெற்றோர்கள், கிராம மக்கள் கதறி அழுது இரங்கல் செலுத்தினர். லட்சுமணன் உடல் சொந்த நிலத்தில் அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அவரது உடலில் போர்த்தப்பட்ட இந்தியக் கொடி பெற்றோரிடம் வழங்கப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்கி சேனை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

லட்சுமணனின் உடலுக்கு இரங்கல் செலுத்தி விட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசியதான அடாவடி அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியது.

இந்த அடாவடி தொடர்பாக ஐந்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் நேற்று கைது செய்த நிலையில், மேலும் 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அடாவடிக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி, அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, நேற்று நள்ளிரவு, அவரது வீட்டிற்கு சென்று, மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் மன்னிப்பு கோரினார் என்றும் தெரியவருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,340.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.