Show all

ஜி.எஸ்.டி சரக்கு சேவை வரியை அமல்படுத்தினால் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் அம்பேல்: கோகோகோலா

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு சேவை வரியை அமல்படுத்தினால் கோகோ கோலா நிறுவனத்துக்காக இந்தியாவில் செயல்படும் சில ஆலைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என பிரபல கோகோ கோலா குளிர்பான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் அண்மையில் அளித்துள்ள பரிந்துரையில், சரக்கு சேவை எனப்படும் ஜி.எஸ்.டி வரியின் கீழ் காற்றடைத்த குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, குடிநீர், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் அடங்கும். அவைகளுக்கு 40விழுக்காடு வரை ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கோகோ கோலா நிறுவனத்தின் துணைத் தலைவர் இஸ்தியக் அம்ஜத், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இந்திய குளிர்பான நிறுவனங்களின் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கும். இது அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு எதிராகவும் அமையும்.

அரவிந்த் சுப்பிரமணியனின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் குளிர்பான நிறுவன தொழில் அடியோடு முடங்கிவிடும். இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான சிறு வியாபாரிகள், முகவர்கள், போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளோர், குளிர்பான பாட்டில்கள் தயாரிப்போர், குளிர்பான நிறுவனங்களுக்கான மூலப் பொருள்கள் தயாரிப்போர் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் கோகோ கோலா நிறுவனத்துக்காக இந்தியாவில் செயல்படும் சில ஆலைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் 57 ஆலைகளை வரும் குளிர்பானங்களை தயாரித்து வரும் இந்நிறுவனத்தில் 25 ஆயிரம் பேர் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.