Show all

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டு உரிமை

மன்னர் ஆட்சி நடக்கிற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில் இடங்களுக்கு இன்று தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 1,050 இடங்களில் மன்னர் ஒப்புதலுடன் நியமனங்கள் செய்யப்படும்.

ஆண்களைப் பொறுத்தமட்டில் பதின்மூன்றரை லட்சம் பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். பெண்களைப் பொறுத்தமட்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தான் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவில், தலைநகர் ரியாத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சவுதி கல்வி மற்றும் பெண்கள் உரிமை பிரசாரகர் ஹாட்டூன் அல் பாஸி முதல் ஓட்டை பதிவு செய்தார்.

கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதும் அடங்கும்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.