Show all

5 வங்கிகள் வரை ஆபத்தில் சிக்கலாம்! இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி: பொருளாதாரத்தின் நிதி-நிலைத்தன்மை அறிக்கையில்

இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் அறிக்கையில் இந்தியாவுக்கு இன்னும் மோசமான காலம் பாக்கி இருப்பதாக, எச்சரிக்கை விடுத்து இருப்பது, அதோடு 5 வங்கிகள் வரை ஆபத்தில் சிக்கலாம் எனவும் எச்சரித்து இருப்பது, அரசையும்; மக்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி  இந்திய பொருளாதாரத்தின் நிதி நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

இந்த அறிக்கையில் இந்தியாவுக்கு இன்னும் மோசமான காலம் பாக்கி இருப்பதாக, எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. அதோடு 5 வங்கிகள் வரை ஆபத்தில் சிக்கலாம் எனவும் எச்சரித்து இருக்கிறது. 

அண்மையில் எந்த நாட்டில் அதிகம் மோசமான கடன்கள் இருக்கின்றன என்கிற பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் திரட்டி, வெளியிட்டு இருந்தது. உலகின் முதல்பத்து பொருளாதார நாடுகளில், அதிகம் மோசமான கடன்களைக் கொண்ட நாடாக நம் இந்தியா முதல் இடத்தில் நிற்கிறது எனச் செய்திகள் வெளியாயின. 

இப்போது, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் அறிக்கையில் இந்தியாவுக்கு இன்னும் மோசமான காலம் பாக்கி இருப்பதாக, எச்சரிக்கை விடுத்து இருப்பது, அதோடு 5 வங்கிகள் வரை ஆபத்தில் சிக்கலாம் எனவும் எச்சரித்து இருப்பது அரசையும்;, மக்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 
 
இந்தியாவின் மோசமான கடன்கள் அடுத்த ஒன்பது மாதங்களில் 9.9 விழுக்காடாக அதிகரிக்கும் எனச் சொல்லி இந்திய அரசை கலக்கத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். இந்திய வங்கிகளுக்கு புதிதாக வாரா கடன்கள் அதிகரிப்பது, புதிதாக கடன்கள் கொடுப்பதில் பெரிய வளர்ச்சி காணாமல் இருப்பது போன்றவைகளை சுட்டிக் காட்டி இருக்கிறது. 

அடுத்து வரும் ஒன்பது மாதங்களில், இந்திய அரசு வங்கிகளின் தோராய வாரா கடன் 13.2 விழுக்காடாக அதிகரிக்கும் என ஒரு பெரிய குண்டைப் போட்டு இருக்கிறார்கள். தனியார் வங்கிகள் கூட அடுத்து வரும் ஒன்பது மாதங்களில், தோராய வாராக் கடன் 4.2 விழுக்காட்டைத் தொடும் எனச் சொல்லி இருக்கிறார்கள். அடுத்து வரும் ஒன்பது மாதங்களில் சுமாராக 3 இந்திய வங்கிகளுக்கு தேவையான பணம் இல்லாமல் போகலாம். உலக பொருளாதார காரணிகள் கொஞ்சம் மோசமானால் கூட சுமாராக 5 வங்கிகள், தங்களுக்குத் தேவையான பணம் இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகலாம் என இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி பொது வெளியில் போட்டு உடைத்து இருக்கிறது. ஆனால் எந்தெந்த வங்கிகள் எல்லாம் அந்த ஆபத்தில் இருக்கிறது என குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 

சேமிப்புக்கு மக்கள் என்னதாம் செய்வார்கள்? ரூபாய் தாளாகச் சேமித்தால், கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் அனைத்தும் வெற்றுத்தாள்களாக மதிப்பற்று போகச்செய்யப்படுகின்றன. வங்கியில் சேமிக்கலாம் என்றால்:- பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட நெருக்கடியைச் சரி செய்ய, பணம் போட்ட வாடிக்கையாளர்கள், தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் தவித்ததையும் நாம் செய்தியாக படித்து இருக்கிறோம். இப்போது ஐந்து வங்கிகள் ஆபத்தில் என்று இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியே அறிவிக்கிறது. இனி சேமிப்புக்கு என்னதான் வழி? நல்;லெண்ண (குட்வில்) அடிப்படைதான்  வாழ்க்கைக்கே ஆதாரம். அதற்கே கேள்விக்குறியா? அறிஞர் பெருமக்கள் புலம்புகின்றார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,381.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.