Show all

சமையல் கியாஸ் நேரடி மானியத் திட்டம் மக்களுக்கு ஆப்புத் திட்டமானது

சமையல் கியாஸ் நேரடி மானியத் திட்டம் 2015 ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்தில் ஒரு கோடியே 62 லட்சம் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சமையல் கியாஸ் வினியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் அவற்றை தடுப்பதற்காக இந்த திட்டம் என்று சொல்லப்பட்டது.

இந்த திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர்கள் சந்தை விலையில் கியாஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். அதன் பின்னர் அதற்கான மானிய தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

கியாஸ் மானியம் பெற முதலில் ஆதார் எண் அவசியம் இல்லை. வங்கி கணக்கு மட்டும் இருந்தால் போதுமானது என மோடி அரசு கூறியது.

பின்னர் ஆதார் அவசியம். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். ஆதார் அட்டையை வங்கி மற்றும் கியாஸ் ஏஜென்சிகளில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு வலுத்ததால் ஆதார் அட்டை இல்லாதவர்களும் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சமையல் கியாஸ் வைத்திருப்பவர்கள் கியாஸ் ஏஜென்சியிடம் விண்ணப்ப படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கியிடம் சமர்பிக்க வேண்டும். அதில் ஆதார் எண், கியாஸ் நுகர்வோர் எண் போன்ற விவரங்கள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

 

வங்கியில் கொடுத்த பின்னர் கியாஸ் ஏஜென்சியிடம் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

 

இந்த நிலையில் கடந்த வாரம் எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆதார் எண் தராதவர்களுக்கு மானியம் நிறுத்தம் செய்யப்படும் என்றும், செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் ஆதார் எண் கொடுப்பவர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்றும் என்று தெரிவித்துள்ளது.

 

இதையடுத்து கியாஸ் ஏஜென்சியினர் ஆதார் எண் தராத வாடிக்கையாளர்களிடம் கேட்டு வலியுறுத்தி வருகிறது.

 

இந்த மாதம் (ஜூலை) முதல் ஆதார் எண் தராதவர்களுக்கு மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பருக்குள் கொடுத்து விட்டால் 3 மாதம் மானியம் சேர்த்து கணக்கில் வரவு வைக்கப்படும்.

 

செப்டம்பருக்கு பிறகு ஆதார் எண் சமர்பிக்கப்பட்டால் 3 மாதத்திற்குரிய மானியம் கிடைக்காது. எந்த மாதத்தில் அவர்கள் கொடுக்கிறார்களோ அது போல் மானியம் வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து போரூரில் உள்ள செல்வி கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் குணசுந்தரி கூறியதாவது:

இந்த மாதத்தில் இருந்து ஆதார் எண் கட்டாயம் ஆகியுள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் கியாஸ் மானியம் பெற முடியாது. செப்டம்பர் வரை 3 மாதம் கருணை காலமாக வழங்கியுள்ளது. அதற்குள்ளாக ஆதார் எண் தந்து விட்டால் நிறுத்தப்பட்ட மாதங்களுக்கும் சேர்த்து மானியம் வழங்கப்படும். செப்டம்பருக்கு பிறகு கொடுத்தால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாத மானியம் கிடைக்காது.

அதனால் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் ஆதார் எண்களை கேட்டு வாங்குகிறோம்.

தினமும் நூறு பேருக்கு குறையாமல் ஆதார் கார்டு பதிவு செய்ய வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தமிழகத்தில் கியாஸ் மானியம் ஒரு கோடியே 55 லட்சம் பேர் பெறுகிறார்கள். இதில் ஆதார் அட்டை நகல் ஒரு கோடியே 18 லட்சம் பேர் வழங்கியுள்ளனர். 56 லட்சம் வாடிக்கையாளர்கள் இன்னும் ஆதார் அட்டை வழங்கவில்லை.

இந்த 3 மாதத்திற்குள் இவர்கள் வழங்காவிட்டால் மானியம் ரத்தாகி விடும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.