Show all

எண்ணிம தொழில் நுட்பம் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவே என்கிறார் மோடி

இன்று 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காகவே, மக்களிடம் எண்ணிம தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.

எண்ணிம தொழில்நுட்பத்தையும் அதுகுறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுமே ஒரு நல்ல அரசு முதன்மைக் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் என்று அவர் கூறினார். ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட எண்ணிம தொழில்நுட்பங்கள், வெளிப்படையான நிர்வாகத்தையும், மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்தும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

அந்த வெளிப்படை நிருவாகம்-

இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு? அரசுக்கு வரியாய் வருகிற வருமானம் எவ்வளவு? அரசின் நிருவாகத் துறைகள் என்னென்ன? ஒவ்வொரு நிருவாகத் துறைக்கும் ஆகும் செலவுகள் என்ன? மாநில அரசுகளுக்கு நடுவண் அரசு வழங்கும் பங்குத் தொகை எவ்வளவு? இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருக்கும் கடன் எவ்வளவு? இந்தியா வெளிநாடுகளில் வாங்கிய கடனுக்காக ஒவ்வொரு ஆண்டும் கட்டும் வட்டி எவ்வளவு? வட்டி விகிதம் என்ன? நிலுவையில் உள்ள பாக்கித் தொகை என்ன? மாநில அரசு, நடுவண் அரசு நடத்தும் தொழில் நிறுவனங்கள் என்னென்ன? அவற்றில் கிடைக்கும் ஆண்டு வருமானம் என்ன? சம்பளமாக செலவாகும் தொகை எவ்வளவு? இந்தியாவின் முதல் பத்து தனியார் நிறுவனங்கள் எவை? ஒவ்வொரு மாநிலங்களின் முதல் பத்து தனியார் நிறுவனங்கள் எவை?

என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்று மக்கள் பகல் கனவு கண்டால் அது உண்மையல்ல!

கார்பரேட் நிறுவனங்கள் அல்லாத, பாமர மக்கள் தொழில் நிறுவனங்கள் எவ்வளவு சம்பாதிக்கின்றனா? என்கிற ஒரேயொரு தகவலைத் திரட்டுவதுதான் மோடியின் எண்ணிம தொழில் நுட்ப இந்தியா?

அது மட்டுந்தான் நடந்திருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.