Show all

நாட்டு நாய்களுக்கு ராணுவத்தில் பணி! பீட்டாவின் ஆட்டம் முடிவுக்கு வரும்

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய ராணுவத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடார், கிரேட் ஸ்விஸ் மலை நாய்கள் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன், முதன்முறையாக முதோல் ரக நாட்டு நாய்கள் ராணுவத்தில் பணியில் சேர்க்கப்படவுள்ளன. முதல் கட்டமாக இந்த ரகத்தைச் சேர்ந்த 6 நாய்கள் தேர்வு செய்யப்பட்டு, கர்நாடகாவில் ஒரு ஆண்டாக பயிற்சி பெற்று வருகிறன்றன. பயிற்சி நிறைவு பெற்றதும், காஷ்மீர் மாநிலத்தில் எல்லை காக்கும் பணியில்  அமர்த்தப்படும்.

     இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,

நோய் தாக்குதல் இல்லாத நாய்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பணியைத் திறன்பட செய்வது, பயிற்சியாளரின் சொல்லுக்கு கட்டுப்படுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. பயிற்சியில் நாட்டு நாய்கள் திறம்பட தேர்ந்துள்ளனஎனத் தெரிவித்துள்ளார்.

     நாட்டு நாய்களில் ராஜபாளையம் ரக நாய், வளர்ப்பவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கும். கோபம் கொண்டவை. முதோல் ரக நாய்கள் கர்நாடகம் உள்ளிட்ட தக்கான பீடபூமி பகுதியில் விரும்பி வளர்க்கப்படுகிறது. இந்த ரக நாய்களை கர்வானி ஹவுன்ட், கேரவன் ஹவுண்ட் என்றும் ஆங்கிலத்தில் சொல்வார்கள். வீட்டுக் காவல்  மற்றும் வேட்டையில் முதோல் ரக நாய்கள் சிறந்தவை.

     ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜோனங்கி, மனிதர்களுடன் எளிதாக பழகும் தன்மையுடையது. குமான் மஸ்தீப் ரக நாய் உத்ரகாண்டைச் சேர்ந்தது. இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளது. பஞ்சாரா ஹவுன்ட் அதிவேகமாக ஓடக்கூடியது. இந்தியன் பாரியா விசுவாசத்திற்கு பெயர் போனது.

     சிப்பிப்பாறைக்கு மதுரை சொந்த ஊர். வேட்டையில் இவற்றை அடித்துக் கொள்ள முடியாது. இந்தியன் மஸ்தீப் பஞ்சாப்பில் விரும்பி வளர்க்கப்படுகிறது. கோம்பை ரக நாய் இந்திய ரகத்தில் பழமையானது. அழிவின் விளிம்பில் உள்ளது. மதுரைப் பகுதியில் அதிகமாக காணப்படும், கன்னி ரக நாய் புத்தி கூர்மைமிக்கது. அதிகமாக குரைக்காது. வளர்ப்பவருக்கு விசுவாசமிக்கது.

     சென்னை, சைதாப்பேட்டையில் தமிழக அரசு சார்பில், நாட்டு நாய்கள் இனவிருத்தி மையம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்திய விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை,  நாய்களை சரிவர கவனிக்கவில்லை என உயர்அறங்கூற்றுமன்றத்தில்,

     பீட்டா சார்பில் வழக்குத் தொடரப்பட்டு, இந்த மையம் மூடப்பட்டது. தமிழ்நாட்டின் பாரம்பரிய நாய் இனங்களான கோம்பை, கன்னி, ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய் இனங்கள் இந்த மையத்தில் இனவிருத்தி செய்யப்பட்டன.

     இனி பீட்டாவின் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.