Show all

தினகரன் பக்கம் வீசும் காற்று! பழனிசாமிஅணி, தினகரனை நீக்கியது ஏன்? :உயர்அறங்கூற்றுமன்றம்

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை விரும்பாமல் அதிருப்தி தெரிவித்ததால் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்லும் முன்பு அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக தனக்கு நம்பிக்கையான தினகரனை கட்சியில் முதல்வர் பழனிசாமியின் நடவடிக்கையை மேற்பார்வையிடுவதற்கு சசிகலா நியமித்தார்.

இதற்கிடையே சசிகலா அணியில் முதல்வர் பதவி பெற்ற பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் அதிமுகவை இணைத்ததால்-

தினகரனும் அவரைச் சார்ந்தவர்களும் அதிமுகவிற்கு தொடர்பில்லாதவர் போல பன்னீர் பழனிசாமி அணியினர் மிதக்கத் தொடங்கி விட்டார்கள் அந்த மிதப்பில்-

இணைப்புக் கூட்டத்தையொட்டி நடந்த பொதுக்குழுவில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரின் நியமனங்கள் செல்லாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பில் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை இன்று விசாரித்த உயர் அறங்கூற்றுமன்றம் சசிகலா, தினகரனைப் பதவியிலிருந்து நீக்கியது ஏன் என்று 13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 (29.11.2017) க்குள் பதில் அளிக்குமாறு முதல்வர் பழனிசாமி அணிக்கு கேட்புஅறிக்கை அனுப்ப உத்தரவிட்டது. அத்தோடு கட்சியின் செலவுக் கணக்குகளை 24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (10.11.2017) க்குள் அறங்கூற்றுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.