Show all

டெல்லியின் காற்று மாசு தீர்வாக நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை தென் இந்தியாவிற்கு மாற்றலாமே

14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசடைந்து வருவதால் தலைநகரில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை தென் இந்தியாவிற்கு மாற்ற, பரிசீலனை செய்யும்படி அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநிலங்களவையில் நேற்றைய கூட்டத்தில் ‘டெல்லி காற்று மாசு குறித்த விவாதம் நடைபெற்றது. ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் இந்த விவாதத்தில் கலந்துக்கொண்ட அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், டெல்லி விரைவில் மக்கள் வாழ முடியாத நகரமாக மாறி விடும் என தெரிவித்தார். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணமுடியாது என்பதால்-

தலைநகரில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களைத் தென் இந்தியாவிற்கு மாற்ற வேண்டும். கூட்டத்தொடர்களை அங்கு மாற்றுவதன் மூலம் வடமாநில பாராளுமன்ற நண்பர்கள் இயற்கை எழில் கொஞ்சும் சுகாதாரமான நகர சூழ்நிலைகளையும் அனுபவிக்கலாம் என்றார். கூட்டத்தொடர்களை நாக்பூர், பெங்களூரு அல்லது சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்தலாம் என்றும், இது தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதாரணமாக இருக்கும் என்றும் நவநீதகிருஷ்ணன் யோசனை தெரிவித்தார். நல்ல யோசனை என்று ஏற்றுக் கொள்ளுமா நடுவண் பாஜக அரசு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,651

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.