Show all

காப்பீட்டுக்கு நிபந்தனைகள்! 'வரும் ஆனா வராது' என்கிற திரைப்பட காட்சி போல, தருவார் ஆனா தரமாட்டார் என்பதுதான் மோடியின் திட்டங்கள்

25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி அண்மையில், தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை நகல் எடுத்து, தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன்படி ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் வரை ஆண்டுக்கு மருத்துவக் காப்பீடு பெறமுடியும். இதன் மூலம் 10 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் பயன்பெறுவார்கள். என்று சொல்;லப் பட்டது

ஆனால் தற்போது 'வரும் ஆனா வராது' என்கிற திரைப்பட காட்சி போல, தருவார் ஆனா தரமாட்டார் என்பதுதான் மோடியின் திட்டம் என்பதாக, காப்பீட்டுக்கு படு படு கேவலமான நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. மொத்தத்தில் தமிழக அரசின் நடைமுறையில் உள்ள, நகல் எடுத்தத் திட்டத்தைக் கூட உருப்படியாக தர மோடிக்கு மனமில்லை என்பது தெளிவாகிறது.

இந்தத் திட்டத்தை தேசிய சுகாதார நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் யார் என்பது குறித்து தேசிய சுகாதார நிறுவனம் மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

குடும்பம் ஒன்றின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் அவர்கள் தேசிய சுகாதாரக் காப்பீடு திட்டத்துக்குள் வரமாட்டார்கள். ஃபிரிட்ஜ், பைக், கார் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்கள் தேசிய மருத்துவக் காப்பீடு வரம்புக்குள் வரமாட்டார்கள்.

ஒரு வீட்டில் 2 அல்லது 3 கார்கள் இருந்தாலோ, மீன்பிடி படகு, டிராக்டர் அல்லது 3 சக்கர உழவு எந்திரம், கிசான் கடன் அட்டையின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வைத்திருந்தாலோ, அரசு ஊழியராக இருந்தாலோ அவர்கள் தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.

மேலும் தரைத்தொடர்பு தொலைபேசி வைத்திருப்போர், வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர், வேளாண்மை சாராத நிறுவனங்கள் நடத்துவோர், வீட்டில் 2 அல்லது 3 அறைகள் இருந்தாலோ அல்லது சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருந்தாலோ தேசிய சுகாதாரக் காப்பீடு திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.

2.5 ஏக்கருக்கு அதிகமான பாசன நிலம், பாசன உபகரணங்கள், 5 ஏக்கர் அல்லது அதிகமான பாசன நிலத்தை 2 அல்லது அதற்கு மேலாக பயிர் பருவங்களில் வைத்திருப்போர், குறைந்தபட்சம் 7.5 ஏக்கர் நிலம், பாசன உபகரணங்கள் வைத்திருப்போர் தேசிய மருத்துவக் காப்பீட்டுக்குள் வரமாட்டார்கள்.

நகர்ப்புறங்களில் பிச்சைக்கார்கள், வீட்டுவேலை செய்பவர்கள், தெருவில் வியாபாரம் செய்பவர்கள், சாலையில் அமர்ந்து சேவைப்பணியில் ஈடுபடுவோர், கட்டுமானப் பணியாளர்கள், பிளம்பர்கள், கொத்தனார்கள், கூலித்தொழிலாளர்கள், பெயிண்டர்க்ள், வெல்டர்கள், செக்கியூரிட்டி, சுமைகூலிகள், துப்புரவுப்பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்தத் திட்டத்தில் சேர்க்க அதிகாரம் வழங்கப்படும். ஆனாலும் மேற்கண்ட தகுதிப் பட்டியலில் இவர்கள் வருவார்கள் என்று தெரிந்தால் தேசிய மருத்துவக் காப்பீட்டுக்குள் வரமாட்டார்கள். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் காகிதத்தில் இருக்கிறது. ஆனால் யாரும் பயனடைய முடியாது. அடேங்கப்பா! தேநீர் விற்றுக் கொண்டிருந்த பையனுக்கு இத்தனை அறிவா? என்று கிழடு கண்டுகள் கிண்டலடிக்கின்றன!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,937.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.