Show all

தெளிவான ஒப்பீடு! திருந்த வேண்டும் வடக்கின் ஆட்சியாளர்கள்

ஒன்றிய பாஜக அரசின் தீபாதை திட்டத்தைக் மிக்கடுமையாக எதிர்த்து, வடநாடு பற்றி எரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றுமே எதிர்ப்பில்லையே, என்ற வினாவிற்கு உரிய காரணத்தை தெளிவாக விடையாக்கிள்ளார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா.

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தீபாதை என்ற பொருளில் ஹிந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்திய சேனையில் ஆள் சேர்க்கும், ஒன்றிய பாஜக அரசின் ஒரு திட்டத்தைக் மிக்கடுமையாக எதிர்த்து, வடநாடு பற்றி எரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றுமே எதிர்ப்பில்லையே, என்ற வினாவிற்கு உரிய காரணத்தை தெளிவாக விடையாக்கிள்ளார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா.

வடநாட்டு மக்கள் தங்களின் குறைந்தபட்ச பள்ளிப் படிப்பிற்கு கிடைக்கும் அரசு வேலையாக சேனைப் பணிகளையே நம்பியுள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா.

ஒன்றிய பாஜக அரசின் தீபாதை கூலியாட்கள் திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் போராட்டங்கள் கொளுந்து விட்டு எரிந்து வருகின்றன. தொடர்வண்டி நிலையங்கள் பல தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 

நீட் வந்த போது தமிழ்நாடு கொதித்தது, ஆனால் வடநாட்டில் சலசலப்பு இல்லை, இப்போது அவர்களது பணி ஆதாரமான சேனைத்திட்டத்தில் கை வைத்துள்ளதால் வடநாடு கொதிக்கிறது என மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார். 

ஒன்றிய பாஜக அரசு புதிதாக தீபாதை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சேனையில் ஆட்களை சேர்க்கும் நான்கு ஆண்டு நிரந்தரம் இல்லாத கூலித்திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தீபாதை திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சாலை மறியல் மற்றும் தொடர்வண்டி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டக்காரர்கள். பீகாரில் பல தொடர்வண்டி நிலையங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். 

இதனால், பீகார் முழுவதும் தொடர்வண்டி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தெலுங்கானாவில் போராட்டம் வெடித்துள்ளது. செகந்திராபாத் தொடர்வண்டி நிலையத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கு நின்று கொண்டிருந்த தொடர்வண்டிகளுக்குத் தீ வைத்ததுடன் தொடர்வண்டி நிலையங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அம்மாநிலத்திலும் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இதனிடையே, போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தீபாதை திட்டம் குறித்து தி.மு.கவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தனது கருத்தை முகநூலில் தெரிவித்துள்ளார்: 
நான் ஏன் தீபாதை திட்டத்தை எதிர்க்கிறேன் என்றால், நாம் அமைதியாக வாழ உயிரைப் பணயம் வைத்து வாழும் ஒருவனுக்கு குறைந்தபட்ச பணிப் பாதுகாப்பு கூட இல்லாது ஒப்பந்தக்கூலி போல நடத்துவது அநீதி எனத் தெரிவித்துள்ளார். 

தீபாதை திட்டத்திற்கு வடநாடு பற்றி எரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றுமே எதிர்ப்பில்லையே! என்ற வினாவிற்கு, வடநாட்டில் படிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே அவர்களது குறைந்தபட்ச பள்ளிப் படிப்பிற்கு கிடைக்கும் அரசு வேலையாக சேனைப் பணிகளையே நம்பியுள்ளனர். தமிழ்நாட்டில் படிக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே இங்கு மருத்துவர்களாக, பொறியாளர்களாக, கணக்காய்வாளர்களாக, வழக்கறிஞர்களாக உருவாகிறோம். இதானால் தான் நீட் வந்த போது வடநாட்டில் சலசலப்பு இல்லை. ஆனால், தமிழ்நாடு கொதித்தது! 

அவர்களுக்கு சோறு சேனையில் உள்ளது அவர்கள் கொதிக்கிறார்கள். நாம் கொதிக்கவில்லை. நமக்கு சோறு படிப்பில் உள்ளது. நீட்டிற்கு நாம் கொதிக்கிறோம். அவர்கள் கொதிக்கவில்லை. எனத் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,283.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.