Show all

தமிழ்நாடு அரசு விசாரணையை முடுக்கியுள்ளது! சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் ஒரே நாளில் நடந்த இரண்டு நிகழ்வுகள்

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் அடுத்தடுத்து நிகழும் ஜாதி கொடுமைகள், பாகுபாடுகள், மரணங்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. உலகமே எங்கேயோ சென்று கொண்டு இருக்கும் போது, வளர்ந்த ஒரு கல்வி நிறுவனமாக பார்க்கப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தொடர்ந்து கொடுமையான சாதி கொடுமைகள் கடைபிடிக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய நாடாளுமன்றத்தினால் நிறுவப்பட்டு, நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல், நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட கல்விநிலையங்கள். முதலில் இந்தியாவில் கரக்பூர், மும்பை, கான்ப்பூர், சென்னை, தில்லி ஆகிய ஐந்து இடங்களில் நிறுவப்பட்டன. இப்பொழுது இவை பதிமூன்று தன்னாட்சி பெற்ற கல்விக்கூடங்களாக விளங்குகின்றன.

இவைகளில் ஒன்றான, சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு நிகழ்வுகள் நாட்டையே உலுக்கி உள்ளன. இது தொடர்பான விசாரணையில் தமிழ்நாடு அரசு குதித்துள்ளது.

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் அடுத்தடுத்து நிகழும் ஜாதி கொடுமைகள், பாகுபாடுகள், மரணங்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. உலகமே எங்கேயோ சென்று கொண்டு இருக்கும் போது, வளர்ந்த ஒரு கல்வி நிறுவனமாக பார்க்கப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தொடர்ந்து கொடுமையான சாதி கொடுமைகள் கடைபிடிக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அங்கு நடக்கும் சாதி கொடுமைகள் காரணமாக மாணவர்கள் தற்கொலையும், பேராசிரியர்களின் பதவி விலகலும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் குறித்த கேள்விகளை அதிகரித்து உள்ளது.

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாணவி பாத்திமா லத்தீப் மர்ம மரணம் நாட்டையே உலுக்கியது. அதேபோல் பேராசிரியர் வசந்தா கந்தசாமி போன்ற அறிவார்த்த ஆசிரியர்கள் சாதி அடிப்படையில், ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள் இங்கு சாதி கொடுமைகளை எதிர்கொள்வது பட்டவர்த்தனமாக இப்படி பல முறை வெளியே வந்து இருக்கிறது.

இந்த நிலையில்தான் ஒரே நாளில் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் மீண்டும் அந்த கல்வி வளாகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் உதவிப் பேராசிரியரான விபின் தன்னை சாதி அடிப்படையில் உடன் ஆசிரியர்கள், மாணவர்கள் அவமானப்படுத்தியதாக கூறி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். தொடர்ந்து எனக்கு எதிராக சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டப்பட்டது.

என்னால் இங்கு பணி புரியவே முடியாது. என்னை முறையாக வேலை செய்யக் கூட விடவில்லை. அதனால் நான் பணியில் இருந்து விலகுகிறேன் என்று கூறி விபின் பதவிவிலகல் செய்தார். இந்த நிகழ்வு வெளியே வந்தவுடன் தமிழ்நாடு ஆளும்கட்சி தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதன்மையாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக மா. சுப்பிரமணியன் தெரிவித்த கருத்தில், சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் சாதி பாகுபாடு காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கு என்னதான் நடக்கிறது என்பதை ஆராய வேண்டும். திமுக ஒரு போதும் சாதி, மத பாகுபாடுகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அங்கு என்ன நடக்கிறது என்பதை உடனே ஒன்றிய அரசு விசாரிக்க வேண்டும், என்று காட்டமாக குறிப்பிட்டார்.

அவர் பேட்டி அளித்த சில மணி நேரங்களில்தான் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் அடுத்த அதிர்ச்சி கிளம்பியது. அங்கு வளாகத்திற்கு உள்ளேயே எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மாணவர்கள் முன்னெடுக்கும் திட்டப்பணிகளுக்கு ஒத்துழைப்பாளாராக பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்பவரின் உடல் இது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

மன அழுத்தம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் அடுத்தடுத்த இரண்டு நிகழ்வுகள் தமிழ்நாடு அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனம் என்றாலும், சென்னையில் இப்படி ஒரு கொடுமை நடப்பதை அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த பாடு குறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த மரணம் குறித்தும், அங்கு நிலவும் கொடுமைகள் குறித்தும் விசாரிக்கும்படி தமிழ்நாடு அரசு கோட்டூர்புரம் காவல்நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளில் தமிழ்நாடு அரசு நேரடி கவனம் செலுத்தப் போவதாக கூறப்படுகிறது. மூத்த காவல் அதிகாரிகள் விசாரணையில் குதித்து உள்ளனர். உன்னி கிருஷ்ணன் மரணத்திற்கு காரணம் யார், அவருக்கு என்ன நடந்தது என்று விசாரணை நடந்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.