Show all

நடக்குமா ஒலிம்பிக் போட்டி! கொரோனா பீதி காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவேண்டாம் என ஜப்பானியர்கள் வலியுறுத்தல்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளது 21,ஆனி, தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (23.07.2021) ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளது 21,ஆனி, தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (23.07.2021) ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கெனவே ஒத்தி வைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை இப்போதும் நடத்த வேண்டாம் என்று ஜப்பானில் நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாளது 21,ஆனி, தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (23.7.2021) தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 15,000 தடகள வீரர்கள், சுமார் 50,000 அதிகாரிகள், 70,000 உதவிப் பணியாளர்கள் ஒன்று கூடுகின்றனர்.

இந்நிலையில் பொதுக்கருத்துக் கணிப்பில் 60விழுக்காடு மக்கள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது, என்றும் சிலர் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர், காரணம் டோக்கியோ நகரில் 10விழுக்காடு மக்களுக்கே கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒரு இடத்தில் கூடுவது என்பது பெரிய இடர் என்றும் கொரோனா பரவலும் இன்னும் குறையவில்லை என்றும் மக்கள் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ சட்டமன்றத்தின் 127 இடங்களுக்கான தேர்தலில் இந்த ஒலிம்பிக் போட்டிகளும், கொரோனா அச்சமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த ஆளுநர் யுரிகோ கொய்கேவின் கட்சி 46 இடங்களிலிருந்து சரிந்து 31 இடங்களையே கைப்பற்றியுள்ளது. 

நாட்டை ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சி 25 இடங்களிலிருந்து முன்னேறி 33 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது பற்றி கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 8 இடங்களிலிருந்து 15 இடங்கள் என்று அதிகமாக கைப்பற்றியுள்ளது.

டோக்கியோ ஆளுநர், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்தலாம் என்கிறார். டோக்கியோ நகரில் 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினால் அது கொரோனாவை அதி தீவிரமாகப் பரப்பி விடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இப்போது 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இது ஆயிரக்கணக்குக்கு எகிறும் என்று எச்சரித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.