Show all

நட்டத்தில் இயங்கும் புல்லட் தொடர்வண்டித் திட்டம்

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அகமதாபாத் முதல் மும்பை வரையிலான இந்தியாவின் முதல் புல்லட் தொடர்வண்டி திட்டம் ஜப்பான் நாட்டின் கடனுதவியுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் சேர்ந்து அடிக்கல்நாட்டினர். இந்த நிலையில்,

அகமதாபாத்-மும்பைக்கிடையேயான வழித்தடம் குறித்து சமூக செயற்பாட்டாளர் அனில் கால்காலி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தொடர்வண்டித் துறையிலிருந்து தகவல் பெற்றுள்ளார்.

அதில், அகமதாபாத்-மும்பைக்கிடையேயான வழித்தடம் 30 கோடி ரூபாய் வரை நட்டத்தில் இயங்குகிறது. கடந்த 3 மாதங்களாக 40 விழுக்காடு இடம் காலியாகவே இருக்கிறது. இந்த வழித்தடத்தில் படுக்கை வசதி இருக்கைகளே பெரும்பாலும் முன்பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலான உயர்ரக இருக்கைகள் காலியாகவே உள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொடர்வண்டித்துறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.

இந்த சாதாரண வழித்தடம் நட்டத்தில் இயங்கும்போது, புல்லட் தொடர்வண்டித் திட்டம் லாபகரமாக இயங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.