Show all

இந்திய மக்களைப் போல சுப்பரமணியன் சாமியும் சலிப்பு! மோடியை இந்தியாவிற்கும் பயணம் செய்ய கேட்டுள்ளார்

மோடிக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. கொள்கை முரண்பாடு மட்டுமே. ஆனால் என்னைப் பற்றி தரைகுறைவாக பேச அவர் கீச்சுவில் ஆட்களை நியமித்து இருக்கிறார் என்கிறார் சுப்பரமணியசாமி, மோடி குறித்த தன் பகடியாடலுக்கான காரணம் குறித்து.

09,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கொரோனா ஓரளவிற்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தியத் தலைமை அமைச்சர் மோடி மீண்டும் தனது உலகளாவிய பயணத்தைத் தொடங்கி விட்டார்.  

அண்மையில் மோடி, நேபாளம் பயணம் மேற்கொண்டார். நேபாள தலைமைஅமைச்சர் சேர் பகதூர் ட்யூபாவை லும்பினியில் பமோடி சந்தித்தார். 

தற்போது தலைமைஅமைச்சர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பானில் இன்னும் இரண்டு நாட்கள் அவர் இருப்பாராம். இந்த நிலையில் தலைமைஅமைச்சர் மோடி ஜப்பான் சென்ற செய்தியை பகிர்ந்து, மோடியின் இந்தியப் பயணம் எப்போது என்று கிண்டலாக சுப்பிரமணியன் சாமி கேட்டுள்ளார். 

அதோடு எனக்கும் மோடிக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. கொள்கை முரண்பாடு மட்டுமே. என்னை பற்றி தரைகுறைவாக பேச அவர் கீச்சுவில் ஆட்களை நியமித்து இருக்கிறார். என்னுடைய குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக அவர்கள் பேசுகிறார்கள். நான் கொள்கை முரண்பாடுகள் பற்றி மட்டுமே கீச்சு பதிவிடுவேன். என் மீதான விமர்சனங்கள் நிற்கவில்லை என்றால் நானும் விமர்சனங்களை நிறுத்த மாட்டேன் என்று சுப்பிரமணியன் சாமி குறிப்பிட்டுள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,257.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.