Show all

மோடிக்கு- சப்பானில், தமிழ் எழுத்துக்களில் வணக்கம் பதாகை!

டோக்கியோ சென்ற தலைமைஅமைச்சர் மோடிக்கு ஜப்பானில் உள்ள பெரும்பான்மை தமிழர் உள்ளடங்கிய, இந்திய மரபுரிமையர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது, பல சிறுவர் சிறுமியர் பதாகைகளை ஏந்தி மோடியை வரவேற்றனர்.

10,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கொரோனா ஓரளவிற்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தியத் தலைமை அமைச்சர் மோடி மீண்டும் தனது உலகளாவிய பயணத்தைத் தொடங்கி விட்டார்.  

அண்மையில் மோடி, நேபாளம் பயணம் மேற்கொண்டார். நேபாள தலைமைஅமைச்சர் சேர் பகதூர் ட்யூபாவை லும்பினியில் பமோடி சந்தித்தார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு சென்றுள்ள தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, அங்கு நடைபெறவிருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கும் குவாட் அமைப்பின் இரண்டாவது உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். 

டோக்கியோ சென்ற தலைமைஅமைச்சர் மோடிக்கு ஜப்பானில் உள்ள பெரும்பான்மை தமிழர் உள்ளடங்கிய, இந்திய மரபுரிமையர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது, பல சிறுவர் சிறுமியர் பதாகைகளை ஏந்தி மோடியை வரவேற்றனர். சில சிறுவர்கள் வணக்கம் என்று தமிழில் எழுதிய பதாகைகளை வைத்திருந்தனர். இதனைக் கண்டு பெரிதும் வியந்தார் தலைமைஅமைச்சர் மோடி. தமிழில் ‛வணக்கம்' என்ற பதாகை வைத்திருந்த ஒரு சிறுவனின் வரவேற்பை ஏற்றமையைக் குறிக்க அப்பதாகையில் கையொப்பமிட்டார் மோடி. மேலும் சிறுவர், சிறுமிகளுக்குக் கை குலுக்கி குதுகலப்படுத்தினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,258.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.