Show all

விலைவாசி இன்னும் உயரும்! அமெரிக்க டாலருக்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதால்

பெட்ரோலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அமெரிக்க டாலருக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் நம் நாட்டின் விலைவாசி உயரும். அமெரிக்க டாலருக்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டி  வருவதை பணமதிப்பு சரிவு என்று தலைப்பிடுகின்றனர் துறை வல்லுனர்கள்.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதல்முறையாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80 அளவுக்கு அதிபயங்கரமாக வீழ்ச்சி அடைந்துள்ளது

இது இந்திய ரூபாய் சந்தித்திராத வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும். இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் முதல்முறையாக 80 ரூபாயையும் தாண்டி 80.07 அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. பணவீக்கம், பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவதால் என்னாகும்? இந்தியா பேரளவு இறக்குமதியைச் சார்ந்திருக்கும் ஒரு நாடு. பொருட்களை இறக்குமதி செய்யும்போது டாலரில்தான் கட்டணம் செலுத்துகிறோம். டாலர் மதிப்பு உயரும்போது நாம் அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.

இதன் காரணமாக, பொதுமக்களின் கையில் பொருள் வந்துசேரும்போது விலை இன்னும் அதிகரிக்கும். இதன் விளைவாக பணவீக்கம், விலைவாசி மேலும் உயர்ந்து இந்திய மக்களின் வாழ்வாதரத்தில் இன்னும் நெருக்கடியை அதிகரிக்கும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,310.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.