Show all

தடை! தமிழகம் கேட்டது நீட்டுக்கு; இப்போது கிடைத்திருக்கிறது கருணை மதிப்பெண்ணுக்கு

04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 11 மொழிகளில் கேள்வித்தாள்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாளில், 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறாகக் கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கும், தலா 4 மதிப்பெண் வீதம், 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் தரப்பில் மேல்முறையீடும், அதற்கு எதிராக ரங்கராஜன் சார்பில் முன்னெச்சரிக்கை மனுவும் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்யப்பட்டன. 

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வந்தது. இதனை விசாரித்த அறங்கூற்றுமன்றம், தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கிட உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,854. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.