Show all

சபரிமலை உச்சஅறங்கூற்றுமன்றத்தீர்ப்பை அமுல்படுத்த முட்டுக்கட்டைப் போராட்டத்தில் பெரும்பங்கு வகிப்பது பாஜக மட்டுமே: கேரள அமைச்சர்

01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், கோயிலுக்கு நடுத்தர அகவைப் பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து சபரிமலை செல்லும் பாதையில் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

போராட்டத்தை மீறி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 2 பெண் பக்தர்கள் பம்பை அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். பாதுகாப்புக்காக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு, பந்தனதிட்டா காவல்துறை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் சிலரை காவல்துறையினர் சிலரைக் கைது செய்துள்ளனர். இதனால் பம்பை அருகே பதற்றம் நிலவி வருகிறது. நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கேரள சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் சைலஜா, பெண் பக்தர்களுக்கு ஆதரவாக தானும் சபரிமலை செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து சபரிமலை விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள கேரள விவசாயத்துறை அமைச்சர் சுனில் குமார், சபரிமலை விவகாரத்திற்கு பாஜக தான் காரணம் என தெளிவுபடுத்தி உள்ளார். 

இது குறித்து, அவர் கூறுகையில், சபரிமலை பிரச்னைக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான் காரணம். சபரிமலை விவகாரத்தை ஓட்டுக்காக பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. ஓட்டுக்காக வடக்கில் ராமரையும், தெற்கில் ஐயப்பனையும் பாஜக பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறது. பாஜக மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.

 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,944.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.