Show all

இந்தியா எந்த இடம் தெரியுமா! உலக பொருளாதார அமைப்பு உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண், வெளியிட்டு உள்ளது.

31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக பொருளாதார அமைப்பு உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண், வெளியிட்டு உள்ளது. அமெரிக்கா, முதலிடம் வகிக்கிறது. சிங்கப்பூர், 2 வது இடத்தை பிடிக்க, ஜெர்மனிக்கு, 3 வது இடம் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்து, 4  ஜப்பான், 5   நெதர்லாந்து, 6 ஹாங்காங், 7 வது இடங்களை பிடிக்க இங்கிலாந்து,  8 வது இடத்தை கைப்பற்றி உள்ளது.
9வது இடத்தை ஸ்வீடன்  பிடிக்க, டென்மார்க்  நாட்டுக்கு, 10 வது இடம்கிடைத்துள்ளது. சீனாவை பொறுத்தவரை, இந்த பட்டியலில், 28 வது இடத்தில் உள்ளது. ரஷியா, 43 வது இடம் வகிக்கிறது. மொத்தம் 140 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில், இந்தியா  58 வது இடத்தில் உள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,943.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.