Show all

தீயாய் பரவிவரும் காணொளி- குஜராத்தில் பாஜகவுக்கு மரண அடியாம்! கருத்துக் கணிப்பில் அம்பலம்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காது; அதிகபட்சமாக 91 முதல் 99 இடங்களைத்தான் அக்கட்சி கைப்பற்றும் என ஏ.பி.பி.-சி.எஸ்.டி.எஸ். கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 76 முதல் 88 இடங்களில் வெல்லும் என்றும் இக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. குஜராத் மாநிலத்தில் 22 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து வருகிறது பாஜக. இம்மாநிலத்தின் 182 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தேர்தல் தொடர்பாக ஏ.பி.பி செய்தி நிறுவனம் மற்றும் சி.எஸ்.டி.எஸ் இணைந்து கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன.

இதில் 22 ஆண்டுகாலம் குஜராத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிற பாஜகவுக்கு இம்முறை மரண அடிதான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியானது அதிகபட்சமாக 91 முதல் 99 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கருத்து கணிப்பு. குஜராத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 93 சட்டமன்றஉறுப்பினர்கள் தேவை.

22ஆண்டுகாலமாக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வந்த பாஜக இம்முறை பெரும்பான்மைக்கே அல்லாடும் நிலை உருவாகிவிட்டது.

தற்போது பாஜகவுக்கு 117 சட்டமன்றஉறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் குஜராத்தில் மிக அதிகபட்சமாக 60 இடங்களைத்தான் கைப்பற்றும் என்பது பொதுவான கருத்தாக இருந்தது. ஆனால் தற்போதைய ஏபிபி-சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்போ காங்கிரஸ் கட்சியானது 71 முதல் 86 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை தெறிக்கவிடும் என்கிறது.

குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸுக்கு தற்போது 59 சட்டமன்றஉறுப்பினர்கள் உள்ளனர்.

மோடி, குஜராத்தையும், பாஜகவையும் வைத்து நடுவண் அரசைக் கைப்பற்றியது உலகறிந்த செய்தி. ஆனால், குஜராத்தில் 22ஆண்டுகால ஆட்சியில், குஜராத்திற்காக மோடி ஒரு ஆணியும் பிடுங்கவில்லை. தன்னை வளர்த்து விட்ட குஜராத்திற்கும், தன்னை வளர்த்து விட்ட பாஜக கட்சிக்கும் நம்பிக்கையானவராக இல்லை.

கட்சியின் மேலிடத் தலைவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு தனது வணிகக் கூட்டாளிகளுக்கு மட்டுமே குஜராத்தும் இந்தியாவும் என செயல் பட்டார் என கட்சியின் பெருந்தலைகளையே புலம்ப வைத்து விட்டார் மோடி; அதனால் அவருக்கு மக்கள் குஜராத்தில் தரப் போவது மரணஅடி; ஆனாலும் மின்னணு முறை வாக்குப் பதிவில், எந்தச் சின்னத்தை அமுத்தினாலும் தாமரைக்கு வாக்கு விழுமேயானால் எந்தக் கருத்துக் கணிப்பும் எடுபடாமல் போகும் என்கிறார் மாயவதி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,627

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.