Show all

வியப்பில் இந்தியா! மோடியை எதிர்த்து போட்டியிடுகிறாரா பிரியங்கா?

மோடிக்கு எதிராக, வாராணசி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தியா! தகிக்கும் வெப்பத்தில்  டெல்லி அரசியல் வட்டாரம்.
 01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்று பிரியங்கா ஏற்கனவே அறிவித்துள்ளார். ரேபரேலி அல்லது அமேதியில் போட்டியிடுவீர்களா என்று பிரியங்காவை செய்தியாளர்கள் கேட்ட போது, ஏன் வாரணாசியில் போட்டியிடக் கூடாதா என்று திருப்பிக் கேட்டு அதிர வைத்தார். 
இந்நிலையில் பிரியங்காவை மோடிக்கு எதிராக நிறுத்த காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆயினும் ராகுல்காந்தியே இறுதி முடிவு எடுப்பார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
   -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,122.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.