Show all

நாம் சூரியனை சடங்காக வழிபட்டு வரும் நிலையில், நம் வழித்தோன்றல் திட்டமாக முன்னெடுக்கிறது! வெட்கி தலைகுனிவோம்

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நம் பழந்தமிழ் முன்னோர் நமக்கு ஈட்டித் தந்த உடைமைகளை யெல்லாம் அயலவர்களிடம் ஒப்படைத்து விட்டு;- தமிழர்களில், கலைத்துறையில், ஊடகத்துறையில், தொழிற்துறையில், கல்வித்துறையில், அறங்கூற்றுத் துறையில், விளையாட்டுத்துறையில், கோயில், வணிகம், வங்கி, பங்குச்சந்தை, இப்படி எந்தத் துறையிலும் இந்தியாவில் முதல் பத்து உடைமையாளனில் தமிழன் ஒருவனும் இல்லாமல் எண்பது விழுக்காடு தமிழர்களும் நிருவாகக் கூலியாகவோ உடலுழைப்புக் கூலியாக அயலவர்க்கும், அயலவர் மொழிகளுக்கும், அடிமைப் பட்டுக்;;;; கிடப்பதால் வெறுமனே சடங்காக சூரியனை வழிபடுவதாகக் கொண்டாடினோம் பொங்கல் திருவிழாவை.       ஆனால் நம்முடைய முன்னோரான பழந்தமிழரின் வழித்தோன்றலான தெலுங்கு இன மக்கள்- சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிக்கவும், மாசை குறைக்கவும், ‘சூரிய வழிபாடு திட்டத்தை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று தொடங்கி வைத்தார் என்கிற வகையாக அறிகிறோம்.

      ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். விஜயவாடாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில், ‘சூரிய வழிபாடு திட்டத்தை, சந்திரபாபு நாயுடு தொடங்;கி வைத்தார்; அப்போது அவர் பேசியதாவது:

வரலாற்றில் முதல் முறையாக, இயற்கை வழிபாட்டு திட்டத்தை, ஒரு அரசு தொடங்கியுள்ளது. பல்வேறு மதங்களில், சூரியனை வழிபடுவது, வழக்கமாக உள்ளது.

மாசை குறைக்கும் நோக்கில், சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிக்க, ஆந்திர அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்காக, ‘சூரிய வழிபாடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.வீட்டு மாடி, பண்ணை வயல் உட்பட எந்த இடத்திலும், சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கலாம். இந்த சூரிய வழிபாட்டை, குடியரசு நாள் விழா போல் கொண்டாட வேண்டும்.

சூரியனுக்கு உள்ள தலையாயத்;துவம், குறிப்பிட்ட ஒரு இடத்தில், நாட்டில், மதத்தில் மட்டும் முடிந்து விடாது. எனவே, ஆந்திராவுக்கு, ‘சூரியன் உதிக்கும் மாநிலம் என, அரசு பெயரிட்டுள்ளது. இயற்கையால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன. இயற்கையை பாதுகாத்தால், நம்மை, அது பாதுகாக்கும். சூரியனை தூதராக, ஆந்திர அரசு பாவிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

      தமிழகத்தில், ஒன்றுக்கு இரண்டு முதல்வர்கள், தமிழன் இயற்கை நெறி மறந்து, மதவாத பாஜகவிற்கு கால்கழுவி கம்பள விரிப்பு வரவேற்பு நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,681

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.