Show all

யாருப்பா இந்த அதுல்யா ரவி ? இணையத்தில் இளைஞர்கள் தொல்லை தாங்க முடியவில்லை

அதுல்யா ரவினு சொன்ன லைக் சும்மா அள்ளித் தெளிக்க ஒரு கூட்டமே தயாராக உள்ளது .

இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். பி டெக் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியிலும் , எம் டெக் சென்னை SRM யூனிவெர்சிட்டிலயும் படித்துள்ளார் . இவர் படித்ததினால் பிரபலமடையவில்லை "குறும்படத்தில்" நடித்ததினால் பிரபலமடைந்துள்ளார்.

இவர் நடித்த குறும்படம் "பால்வாடி காதல்". யூடியூபில் தமிழ் ஷார்ட் பிலிம் என்று டைப் செய்தாலே இவரது குறும்படம் தான் முதலில் வரும் . இதுவரை அக்குறும்படத்தை 5 . 5 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இவர் தற்போது "ஏமாளி" எனும் திரைப்படத்தில் கதாநாயகியை நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திர கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது."சுட்டுப் பிடிக்க உத்தரவு" படத்திலும் நடித்து வருகிறார்.

உலகெமெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகவுள்ள "நாகேஷ் திரையரங்கம்" திரைப்படத்தில் காது மற்றும் வாய் பேசாத கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் நாடோடிகள் 2 ஆம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இவர் இதற்குமுன் "காதல் கண் கட்டுதே " என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் 2017 Feb 14"காதலர் தினத்தன்று " வெளியானது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.