Show all

மோடி சொன்னபடி உங்களுக்கு ரூ.15 லட்சம் வந்தாச்சு தெரியுமுல்ல!

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடிமக்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வைப்பு செய்வதாக தலைமை அமைச்சர் ஆவதற்காக மோடி தனது தேர்தல் கருத்துப் பரப்புதலில் கூறியதாகவும், அதை தரவில்லை என்றும் நாம் நொந்து கொண்டிருக்கிற இந்த நிலையில், 

புலனச்  (WhatsApp) சேதி ஒன்று தீயாகச் சுற்றி வருகிறது. இது ஒரு கற்பனை உரையாடல்தாங்க. யார் மனதையும் புண்படுத்துவது நமது நோக்கம் இல்லை என்கிற பீடிகையோடு.

நான்: நீங்க ஆட்சிக்கு வந்ததும் எல்லோருக்கும் தரேன்னு சொன்ன 15,00,000 லட்சம் பணம் எப்போ தருவீங்க.? 

மோடி: அதுக்குத் தான் எல்லோருக்கும் ஜியோ செறிவட்டை கொடுத்தாச்சே.! 

நான்: என்னாது ஜியோ செறிவட்டையா, அதுக்கும் இந்த 15,00,000 லட்சத்துக்கும் என்ன சம்பந்தம்? 

மோடி: சொல்லுறேன் நல்லா கேட்டுகோங்க! எங்க ஆட்சி வர்றதுக்கு முன்னாடி, செல்பேசியிலே 1 ஜிபி தரவு எவ்வளவுக்கு வாங்குனீங்க? 

நான்: 300 ரூபாய்க்கு. 

மோடி: இப்போ எவ்ளோ? 

நான்: 5 ரூபா. 

மோடி: அப்போ 1 ஜிபிக்கு எவ்வளவு சேமிப்பு ? 

நான்: 295 ரூபாய். 

மோடி: ஒரு மாசத்துக்கு நீங்க 30 ஜிபி (ஒரு நாளைக்கு 1 ஜிபி கணக்கு) செலவு செய்கிறீங்க. அப்படின்னா, ஒரு மாசத்துக்கு எவ்வளவு சேமிப்பு? 

நான்: 30 X 295 = 8850 ரூபாய். 

மோடி: 3 பேரு இணையம் பயன் படுத்தற ஒரு குடும்பத்துல, இதுனால மாசம் எவ்வளவு சேமிக்கிறீங்க? 

நான்: 8850 X 3 = 26550 ரூபாய். 

மோடி: அப்போ ஒரு ஆண்டுக்கு எவ்ளோ? 

நான்: 26550 X 12 = 3,18,600 ரூபாய். 

மோடி: அப்பிடினா எங்க ஆட்சி நடக்குற இந்த 5 ஆண்டுக்கு எவ்வளவு சேமிப்பு? 

நான்: 318600 X 5 =  15,93,000 ரூபாய். 

மோடி: நான் கொடுத்தது போக மீதம் இருக்குற 93000 ரூபாய் எப்போ எனக்கு திருப்பி தருவீங்க? 

கொய்யால... இனி 15 லட்சம் பத்தி வாயை திறப்போமா? இவ்வாறு சுற்றி வருகிறது அந்தப் புலனச் சேதி கூட்டிக் கழிச்சி பார்த்தா கணக்கு சரியா வருதா?

தமிழிசைக்கு மட்டும் இந்தச் சேதியை தயவு செய்து யாரும் பகிர்ந்திடாதீங்க. அப்புறம் இந்தக் கணக்கை உண்மை மாதிரியே சொல்லிக்காட்டி, அவங்க பாஜகவுக்கு ஓட்டு சேகரிக்கத் தொடங்கிடுவாங்க

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.