Show all

காற்று மாசுபாடு: இந்தியாவிற்கு முதலிடம்! என்ன ஆச்சு சொச்சபாரத் மோடிபாஸ்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்திற்கும், பெரும் கேடு விளைவிக்கக் கூடிய கந்தக டை-ஆக்சைடை, அதிகளவில் காற்றில் கலக்கச் செய்வதில், உலகிலேயே இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்த விபரம் வெளியாகியுள்ளது.

கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5109 முதல் (2007) அதிகளவில் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றுவதில், முதலிடத்தில் இருந்த சீனாவில், தற்போது அது 75 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் இந்தியாவின் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றம், 50 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து, தற்போது உலகளவில் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாமிடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா, தற்போது சீனாவையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் நிலக்கரியை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. நிலக்கரியின் எடையில் சுமார் 3 விழுக்காடு அளவுக்கு கந்தகம் உள்ள நிலையில், அதை அதிகம் பயன்படுத்துவதால், காற்று கடுமையாக மாசடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தக டை-ஆக்சைடு நச்சு காரணமாக, இந்தியாவிலும் சீனாவிலும் பொதுமக்களின் ஆயுட்காலம் வெகுவாக குறைவதாகவும், ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 3 கோடியே 30 லட்சம் பேரும், சீனாவில் சுமார் 9 கோடியே 90 லட்சம் பேரும் கந்தக டை-ஆக்சைடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.

65 ஆண்டுகளுக்கு முன்பே, கந்தக டை-ஆக்சைடு காற்றில் பெருமளவு கலந்து மாசுபட்டதால், லண்டனில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,609

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.