Show all

71 ஆண்டுகளுக்குப் பிந்தைய ஞானோதயம்! ஒன்றிணைந்த இந்தியாவிற்கு ஜின்னா தலைமைஅமைச்சர் ஆகியிருக்கலாம்: தலாய்லாமா

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, பாகிஸ்தான் தேச தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா விடுதலைக்குப் பிறகு இந்தியத் தலைமைஅமைச்சர் ஆகியிருக்கலாம் என தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலம், பனாஜியில் அமைந்துள்ள கோவா மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற நிக்ழ்சி ஒன்றில் பங்கேற்று தலாய்லாமா மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே விடுதலைக்குப் பிறகு இந்தியத் தலைமைஅமைச்சர் ஆக வேண்டும் என்பதை காந்தி அவர்கள் விரும்பினார். ஆனால், காந்தியின் விருப்பத்தை நேரு விரும்பவில்லை. நேருவிற்கு இருந்த சிறிது சுயநலமே இதற்கு காரணம் என நான் நினைக்கிறேன்.

ஒருவேலை காந்தி கூறியது போல் நடந்திருந்தால், பாகிஸ்தான் நாடு உருவாகாமல் ஒன்றினைந்த இந்தியாவாக தேசம் இருந்திருக்கும். நேருவைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர், மிகவும் அனுபவம் வாய்ந்த நபர், சிறந்த அறிவாளி ஆனால் சில சமயங்களில் தவறு கூட நடந்துவிடுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,874.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.