Show all

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (பிப். 28) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும்,

வங்கித்துறையில் நடுவண் அரசு சீர்திருத்தங்களைக் கைவிடவேண்டும்,

நிரந்தர வேலைவாய்ப்புகளில், சேவைநிறுவனங்களை அனுமதிக்க கூடாது,

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,

பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,

வங்கி ஊழியர்களுக்கான அடுத்த கட்ட சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

     இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக, மத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள் - வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (யு.எஃப்.பி.யு.) இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

     இதையடுத்து பிப்ரவரி 28-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என யு.எஃப்.பி.யு. அறிவித்தது. இதில் நாடு முழுவதும், 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

 

     இந்தப் போராட்டத்தில், தமிழகத்தில் உள்ள பொதுத்துறை, தனியார்துறையைச் சேர்ந்த 7,000 வங்கிக் கிளைகளின் ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.