Show all

ஆதார் அமைப்பு ஒரு புதிய குழப்பத்திற்கு வித்திட்டிருக்கிறது! பாதுகாப்பு காரணத்திற்காக ‘தற்காலிக எண்’ என்று

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆதார் குறித்த சர்ச்சைக்கு எப்போதுதான் முடிவு வரும் என்று பொதுமக்கள் திட்டிதீர்த்து வரும் நிலையில், இந்த முறை வேறு யாரும் ஆதார் குறித்து தவறாக கூறாமல் அந்த அமைப்பே சுயமாக பிரச்சனையை தனக்கு தானே உருவாக்கி இருக்கிறது.

110 கோடி மக்கள் பயன்படுத்தும் பிரமாண்ட அடையாள அட்டை அமைப்பு தனக்கு தகுந்தாற் போல் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது. தற்போது அனைவரும் 16 இலக்க தற்காலிக எண்ணை ஆதார் எண்ணிற்கு பதிலாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

எட்வர்ட் ஸ்னோடென் ஒருமுறை ‘இனி போர் ஆயுதங்கள் மூலம் வராது, கணினியின் மூலம் வரும் என்றார். இப்போது அவரின் வாக்கு பலித்து இருக்கிறது. முதன்மையாக அவர் ஆதார் குறித்து எச்சரிக்கை விடுத்ததும் பலித்துள்ளது.

சிஐஏ அமைப்பில் வேலை பார்த்து பின் அங்கு இருந்து வெளியே வந்தவர் எட்வர்ட் ஸ்னோடென். இணையத்தின் மூலம் ஒரு அரசு நாட்டின் மக்களை எப்படி எல்லாம் கண்காணிக்கிறது என்ற உண்மைகளை வெளியிட்டார். இவர் தற்போது ரஷ்யாவில் தற்காலிக குடியுரிமை பெற்று வசிக்கிறார்.

மக்களுக்கு எதிராக நடக்கும் சுழியம் குற்றங்கள் குறித்து பேசும் இவர் ஆதார் குறித்தும் பேசி உள்ளார். ஆதார் என்பதே மோசடி, அரசு மக்களின் அனுமதியுடன் விவரங்களை திருடத்தான் இப்படி அட்டை வழங்கப்படுகிறது என்றார். மேலும் ஆதார் அமைப்பையே கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தற்போது அவர் சொன்னது போலவே ஆதார் அமைப்பிற்கே அதன் பாதுகாப்பு குறித்த ஐயம் எழுந்துள்ளது. இனி ஆதார் எண்ணிற்கு பதிலாக 16 இலக்க ‘தற்காலிக எண்ணை பயன்படுத்தும் படி மிகவும் எளிதாக கூறியுள்ளது. இதுதான் பாதுகாப்பு என்று தெரிவித்து இருக்கிறது. அப்படி என்றால் இவ்வளவு நாள் இந்த விவரம் எல்லாம் பாதுகாப்பாக இல்லையா என்ற ஐயம் எழுகிறது.

ஆதார் இனி தற்காலிக எண்ணை பயன்படுத்த சொல்லி இருக்கிறது. ஆனால் 70 விழுக்காடு மக்கள் ஏற்கனேவே தங்கள் எண்ணை செல்பேசி, வங்கி என அனைத்திலும் இணைத்து விட்டார்கள். எனவே அவர்களின் கதி, அவர்களின் அடையாளம் எல்லாம் களவு போய் இருக்குமா! அப்படி களவு போயிருந்தால் என்னென்ன பாதிப்புகள் வரும் அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,664

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.