Show all

மின்னலாக பரவி வரும் காணொளி! பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என மத்திய பிரதேச மாணவர்கள் உறுதி மொழி

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இயங்கலை (Online) தேர்வு முறையை ரத்து செய்யாத பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என மத்திய பிரதேச மாணவர்கள் உறுதி மொழி எடுக்கும் காணொளி சமூக வலைதளங்களில் தீயாக தாவி பரவி வருகிறது. மத்திய பிரதேச அரசின் இயங்கலை தேர்வு முறை மாணவர்களை கடுமையாக பாதிக்கிறது என்பது மாணவர்கள் புகார்.

ஆகையால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான போராட்டத்தின் ஒருபகுதியாக, இட்ரசி என்ற பகுதியில் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களை, இயங்கலை தேர்வை ரத்து செய்யும் வரை பாஜகவுக்கு வாக்களிக்க போவதில்லை என உறுதி மொழியெடுக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இந்த உறுதி மொழி எடுக்கும் காணொளி சமூக வலைதளங்களில் தற்போது மின்னலாக பலருக்கும் பகிர்வு செய்யப்பட்டு வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,681

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.