Show all

வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் டெல்லியில் யமுனை ஆற்றின் வௌ;ளச் சமவெளி பகுதியில் வருகிற 11-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு உலக கலாச்சார திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. லட்சக்கணக்கானோர் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள்.

 

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யமுனா நதியின் சுமார் 1000 ஏக்கர் வௌ;ளச் சமவெளி அழிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தால் கடும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படும். எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர்.

 

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கியது தேசிய பசுமை தீர்ப்பாயம்.   நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவரும் வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்த நீதிபதி, மத்திய மற்றும் டெல்லி மாநில அதிகாரிகளிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள்.

 

நதியை அசுத்தமாக்கும் கழிவுகளை யமுனாவில் திறந்துவிடக்கூடாது, மேற்கொண்டு நதியின் சுற்றுச் சூழலை பாதிக்கும் எவ்வித கட்டுமானங்களையும் ஏற்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து கட்டுமான பணிகளில் உதவி வரும் டெல்லி நகர மேம்பாட்டு ஆணையத்திற்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வருங்காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொள்வாரா, இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.