Show all

அசாமில் விடிய விடிய போராட்டம்! குடிமக்கள் கணக்கெடுப்பு என்றபோர்வையில் மதவாதத் திணிப்பைக் கண்டித்து

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதெல்லாம் நல்ல விசயங்கள் என்று பட்டியலிட்டு செயல்படுத்த காங்கிரஸ் திட்டமாக வைத்திருந்தவைகளைதாம் பாஜக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் திட்டமாக இல்லாமல் காங்கிரஸ் செயல்படுத்தத் தொடங்கியிருக்குமானல் மக்களுக்கு ஏராளமான நன்மைகள் விளைந்;திருக்கும். ஆனால் காங்கிரஸ் செயல்படுத்த வில்லை. 

பாஜகவிற்கு எந்த திட்டமும் கிடையாது. காங்கிரசின் திட்டங்களையே ஒவ்வொன்றாக முன்னெடுத்து வருகிறது. ஆனால் பாஜக அந்தத் திட்டங்களை முன்னெடுக்கும் போது மக்களுக்கு தீமையாகவே வந்து சேருகிறது. ஏனென்றால் பாஜகவின் கண்ணோட்டம் வேறு. பாஜகவின் கண்ணோட்டம் மதவாதக் கண்ணோட்டம். சமூக ஏற்றதாழ்வுக் கண்ணோட்டம். மக்களை பாகுபடுத்தி செயல்படுத்துகிற கண்ணோட்டம் அதனால் தான் காங்கிரஸ் நன்மை என்று கருதிய திட்டங்கள் யாவும் மக்களுக்கு பாஜக முன்னெடுக்கும் போது தீமையாகி விடுகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆதார் போன்ற அடையாள முறை நடைமுறையில் உண்டு. அது மக்களிடம் உள்ள பொருளாதார ரீதியான ஏற்றதாழ்வுகளை களைந்திடப் பயன் படுத்துகிறது. 

பாஜகவோ ஆதார் அடையாளத்;;;தை பொருளாதார ரீதியான ஏற்றதாழ்வுகளை வளர்த்து, பொதுமக்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதற்கு பயன் படுத்துகிறது. இப்படித்தாம் பாஜகவின் ஒவ்வொரு திட்டமும் பொதுமக்களுக்கு எதிராகப் போய் விடுகிறது. ஏனென்றால் பொதுமக்களுக்கு எதிரானதுதாம் பாஜகவின் கொள்கை ; கண்ணோட்டம் எல்லாம்.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. இதற்காக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்த பதிவேட்டைத் தயார் செய்தனர்.

இதன் இறுதி வரைவுப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், ஏராளமானோர் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தது. வங்கதேசத்தவர் குடியேறும் பிரச்சினையை மதரீதியாக பாஜக கையாள்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெளிவுபடுத்தி வருகின்றன.

இந்தநிலையில், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என 8 பேர் குழுவினர் நேற்று அசாம் சென்றனர். தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நடைபெறும் கருத்துப்பரப்புதலில் அவர்கள் கலந்து கொள்ள இருந்தனர். இதற்காக சில்சார் விமான நிலையம் வந்த அவர்களை அசாம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சில்சாரில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அசாமில் சர்வாதிகாரம் நிலவுவதாக திரிணாமுல் காங்கிரஸ் தெளிவுபடுத்துகிறது.

சில்சார் விமான நிலையத்தைவிட்டு வெளியேற மறுத்த அவர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி போராட்டம் நடத்தினர். அசாமை விட்டு திரும்பிச் செல்ல முடியாது எனக் கூறி அவர்கள் முழுக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து விமான நிலையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த அறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் இரவு முழுவதும் அங்கேயே கழித்தனர். காலை மீண்டும் அவர்கள் சில்சார் செல்ல அனுமதிக்குமாறு கோரினர்.

ஆனால் சில்சார் நகருக்குள் செல்ல வெளியாட்டுகளுக்கு அனுமதியில்லை எனக்கூறி அம்மாவட்ட ஆட்சியர் மறுத்து விட்டார். பல மணிநேரம் நடந்த போராட்டத்திற்கு பின்பும் அனுமதி கிடைக்காததால் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளில் 6 பேர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மற்ற இருவர் பிறகு கிளம்பிச் செல்வதாக கூறி விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,869.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.