Show all

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா வெற்றிக்கு 84 ரன்கள் தேவை

இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 285 எடுத்திருந்தது. 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அஷ்வின் 4 விக்கெட்டுக்களையும், ஷமி 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்றினர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 80 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ  70 ரன்களும் குவித்தனர்.

அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி சார்பில் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணி சார்பில் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடி 225 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற அனைவரும் சொற்ப ரங்களிலேயே ஆட்டமிழந்தனர். இறுதியா இந்தியா முதல் இன்னிங்சில் 274 ரன்கள் அடித்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாம் குர்ரான் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

அதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு  9 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 53 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் மற்றும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

அதைத்தொடர்ந்து, இந்திய அணி 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து. விராத் கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய வெற்றிக்கு இன்னும் 84 ரன்கள் தேவை. மேலும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.