Show all

இரண்டாவது இடம்பெற்றுள்ளது தமிழ்நாடு! இந்தியாவின் பத்து பணக்கார மாநிலங்களில்

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில், வேளாண்மை, வணிகம், தனித்திறன் என்கிற அடிப்படைகளைப் பொறுத்து, பொருளாதார வளர்ச்சி விழுக்காடு அமைந்துள்ளது. இந்த வளர்ச்சி அடிப்படையில், இந்தியாவின் பத்து பணக்கார மாநிலங்களில், இரண்டாவது இடம்பெற்றுள்ளது தமிழ்நாடு. 

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: மகிழ்ந்து கொண்டாடுவோம் தமிழர்களே! இரண்டாவது இடம்பெற்றுள்ளது தமிழ்நாடு! இந்தியாவின் பத்து பணக்கார மாநிலங்களில் என்கிற இனிப்பான செய்தியில்.

மொழி, மற்றும் கலாச்சாரத்தில் பன்முகத்தன்மை கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாகும் இந்தியா. இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் மொழியும் கலாச்சாரங்களும் மாறுபடுகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில், வேளாண்மை, வணிகம், தனித்திறன் என்கிற அடிப்படைகளைப் பொறுத்து, பொருளாதார வளர்ச்சி விழுக்காடு அமைந்துள்ளது. 

இதற்கிடையில் கடந்த அரையாண்டு நடப்பு அரையாண்டு கணக்கீட்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், எந்த மாநிலம் முன்னிலையில் உள்ளது. எது பின் தங்கியுள்ளது. முதல் பத்து மாநிலங்கள் எவை என்கிற பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றிருப்பது தமிழ்மக்களுக்கான பெருமிதம் ஆகும்.

தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலமாகும். தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி  19.43 டிரில்லியன் ரூபாயாகும் (265.49 பில்லியன் டாலர்). தமிழ்நாட்டில் 50விழுக்காட்டிற்கு அதிகமான மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். தமிழ்நாட்டில் வேளாண்மை 13விழுக்காடும் தொழில்துறை 34 விழுக்காடும், சேவைத்துறை 53விழுக்காடும் பங்கு வகிக்கின்றன. இங்கு ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரி பாகங்காள், மருந்து நிறுவனங்கள், துகில் உற்பத்தி, துகில் வணிகம், தோல், வேதியியல் தமிழ்நாட்டின் வலுவான காரணிகளாக பார்க்கப்படுகின்றன.   

மகராஷ்டிரா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலமாகும். இதன் தலை நகர் மும்பையாகும். இதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 26.62 டிரில்லியன் ரூபாயாகும். இம்மாநிலத்தில் வேளாண்மை 51விழுக்காடும் சேவைத் துறை 40விழுக்காடும், தொழில் துறை 9விழுக்காடும் முதன்மைப் பங்கு வகிக்கிறது. இங்கு உற்பத்தி துறை, பன்னாட்டு வணிகம், பேரளவு ஊடகம், விமானத்தளம், தொழில் நுட்பம், பெட்ரோலியம், ஒப்பனை, ஆடை, சுற்றுலா துறைகள் இம்மாநிலத்தின் முதன்மைக் காரணிகளாகப் பார்க்கப்படுகிறது. 

மூன்றாமிடத்தில் இருப்பது குஜராத் மாநிலமாகும். இதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 19 டிரில்லியன் ரூபாயாகும். இங்கு வேளாண்மை 19விழுக்காடும் சேவைத் துறை 36விழுக்காடும், தொழில் துறை 45விழுக்காடும் ஆகவும் உள்ளது. மருந்து, வேதியியல், தூய்மையாக்கல், பெட்ரோல்வேதியியல், செராமிக்ஸ், துகிலியல், ஆட்டோமொபைல் துறை முதன்மைக் காரணியாக உள்ளன. 

கர்நாடகாவின் உள்நாட்டு உற்பத்தி 18.03 டிரில்லியன் ரூபாயாகும். இங்கு சேவைத்துறை 64விழுக்காடும், தொழிற்துறை 26விழுக்கடும், வேளாண்துறை 10விழுக்காடும் உள்ளன. இங்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ், இந்திய டெலிபோன் தொழிற்துறை உள்ளிட்ட முதன்மை நிறுவனங்கள் உள்ளன. ஆட்டோமொபைல், அக்ரோ, ஏரோஸ்பேஸ், துகில் உற்பத்தி மற்றும் வணிகம், உயிரிநுட்பம், உள்ளிட்ட பலவும் மாநிலத்தின முதன்மைப் பங்காக உள்ளது. 

உத்தரபிரதேசம் இந்தியாவின் 4வது பெரிய பணக்கார மாநிலமாகும். இதன் உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது 17.06 டிரில்லியன் டாலராகும். இங்கு சேவைத்துறை 50விழுக்காடும், தொழில்துறையில் 26விழுக்காடும், வேளாண்துறையில் 24விழுக்காடும் பங்கு வகிக்கிறது.

மேற்கு வங்கம் இந்தியாவின் 5வது பெரிய பணக்கார மாநிலமாக உள்ளது. இதன் உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது 14.44 டிரில்லியன் ரூபாயாகும் இங்கு சில உருக்கு ஆலைகள் உள்ளன. இங்கு சேவைத்துறை 53விழுக்காடு வேளாண்துறை 21விழுக்காடு, தொழில் துறை 26விழுக்காடு பங்கு வகிக்கின்றன. 

அறாவது இடம் பெறும் ராஜஸ்தான் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 11.98 டிரில்லியன் ரூபாயாகும். இங்கு சேவைத்துறையின் பங்கு 47.5விழுக்காடு, வேளாண்துறை 44.4விழுக்காடு, தொழில்துறை 8.1விழுக்காடு பங்கு வகிக்கிறது. 

ஏழாவது மாநிலம் தெலுங்கானா. தெலுங்கானாவின் உள்நாட்டு உற்பத்தி 11.9 டிரில்லியன் டாலராகும். இங்கு கிருஷ்ணா, கோதாவரி என இரண்டு பெரிய ஆறுகள் ஓடுகின்றன. இங்கு தகவல் தொழில் நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை முதன்மைப் பங்கு வகிக்கின்றன. 

ஆந்திராவின் உள்நாட்டு உற்பத்தி 10.91 டிரில்லியன் ரூபாய் ஆகும். இந்த மாநிலத்தில் வேளாண்மையே முதன்மை பங்கு வகிக்கிறது. இங்கு 62விழுக்காடு மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேளாண்மையில் பங்கு வகிக்கின்றனர். இங்கு சேவைத்துறை 35விழுக்காடு, விவசாயத்துறை 55விழுக்காடு, தொழில் துறை 10விழுக்காடு பங்கு வகிக்கிறது. 

மத்திய பிரதேசம் மத்திய பிரதேசத்தின் சேவைத்துறை 35.6விழுக்காடு, தொழிற்துறை 4.8விழுக்காடு, வேளாண்துறை 59.6விழுக்காடு பங்கு வகிக்கிறது. 

கேரளாவின் உள்நாட்டு உற்பத்தி 9.47 டிரில்லியன் ரூபாய் ஆகும். இந்த பொருளாதாரத்தில் சேவைத்துறை முதன்மை பங்கு வகிக்கிறது. இதே சேவைத்துறையானது 63.6விழுக்காடு, தொழில் துறை 28.3விழுக்காடு, வேளாண்துறை 8.1விழுக்காடு பங்கு வகிக்கிறது. 

டெல்லியின் உள்நாட்டு உற்பத்தி 8.55 டிரில்லியன் ரூபாய் ஆகும். இது சேவைத்துறையில் 86விழுக்காடும், தொழில்துறை 12விழுக்காடும், வேளாண்துறை 2விழுக்காடும் பங்கு வகிக்கிறது. வங்கித்துறை, நிதித்துரை, காப்பீட்டுத் துறை, உணவு, உள்கட்டமைப்பு மற்றும் மனை துறைகள், சுற்றுலா, தூதஞ்சல் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,334.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.